செய்திகள் :

சென்னை: 'திமுகவை புகழ்ந்து தள்ளிய பாஜக கவுன்சிலர்!' - ஜாலியாக கலாய்த்த உடன்பிறப்புகள்!

post image

மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சிக் கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்திருந்தது. எப்போதும் எதிர்க்கருத்துகளை முன்வைத்து அமளி செய்யும் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், இன்று திடீரென திமுகவை ஏகத்துக்கும் புகழ்ந்ததால் திமுக உறுப்பினர்கள் உற்சாகமாகிவிட்டனர். திமுகவை புகழ்ந்த உமா ஆனந்தை ஜாலியாக கிண்டலடிக்கவும் செய்தனர்.

சென்னை மாநகராட்சிக் கூட்டம்
சென்னை மாநகராட்சிக் கூட்டம்

134 வது வார்டு பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் எப்போதுமே தன்னுடைய வார்டு குறித்த கோரிக்கைகளை முன்வைத்து அமளி செய்வார். ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துகளை பேசுவார். கடந்த மாதம்கூட மாமன்றம் தொடங்குவதற்கு முன்பாகவே வெளிநடப்பு செய்திருந்தார்.

இந்நிலையில், இன்று நேரமில்லா நேரத்தில் பேச எழுந்த உமா ஆனந்தன் ஆரம்பத்திலேயே திமுக-வை ஏகத்துக்கும் புகழ்ந்தார். 'மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று நான்காண்டுகளில் நான் முன்வைத்த 80% கோரிக்கைகளை மேயரும் துணை மேயரும் நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள். பாஜக உறுப்பினர் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடாது என்றில்லாமல் நல்ல எண்ணத்தோடு பணிகளை முடித்துக் கொடுத்த திமுக அரசுக்கு நன்றி. இந்த மாமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்குள் 100% கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்' என்றார்.

உமா ஆனந்தன்
உமா ஆனந்தன்

பாஜக உறுப்பினரே திமுக-வை புகழ்ந்ததால் அவையில் பெருவாரியாக இருக்கும் திமுக உறுப்பினர்கள் கரகோஷம் எழுப்பினர். 'இதுதான் திராவிட மாடல் அரசு' என துணை மேயர் மகேஷ் குமார் பெருமிதம் பேசினார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து பேசிய 99 வார்டு திமுக கவுன்சிலர் பரிதி இளம் சுருதி, 'உமா ஆனந்தன் அவர்கள் நம்மைப் பாராட்டி பேசினார். சில நிமிடங்களுக்கு முன் ஒரு கேமராமேனை அழைத்து அவர் மைக்கில் பேசுவது போல போஸ் கொடுத்து ஒரு போட்டோ எடுத்ததைப் பார்த்தேன். அதுதான் பாஜக. பாஜக செய்வதெல்லாம் ரீல். திராவிட மாடல் தான் ரியல். நீங்கள் டூப். நாங்கள்தான் டாப்.

உமா ஆனந்தன்
உமா ஆனந்தன்

எங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நல்லது செய்வோம் என தலைவர் சொன்னார். அதை செய்தும் காட்டியிருக்கிறார்' என உமா ஆனந்தை கலாய்த்தார். உடனே துணை மேயர் மகேஷ் குமார், 'ஏம்ப்பா...அவங்கதான் நம்மை பாராட்டுறாங்களே, அப்பவும் விடமாட்டீங்களா?' என கமெண்ட் அடித்தார்.

வழக்கத்துக்கு மாறாக உமா ஆனந்த் ஏகத்துக்கும் புகழ்ந்து பேசியதை பார்த்த திமுகக்காரர்களே, 'எலெக்சன் நேரமாக இருப்பதால் கட்சி தாவ நினைக்கிறாரோ..' என கிசுகிசுத்துக் கொண்டனர்.

`வேளச்சேரியில் போட்டியிடுகிறாரா விஜய்?' எம்.ஜி.ஆர் முதல் கமல் வரை தொகுதி தேர்வு செய்த வரலாறு!

தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தல்,விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்... மேலும் பார்க்க

Exclusive: `பன்னீர்செல்வத்தின் அரசியல் நாடகம்; விஜய்க்கு பதிலடி ஏன்?' - செல்லூர் ராஜூ அதிரடி பேட்டி

தமிழக அரசியல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. வலுவாக இருந்த திமுக கூட்டணியில் காங்கிரஸ் போக்கு காட்டிக்கொண்டிருக்க, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்திருப்பது அந்த கூட்டணிக்கு வலிமை ச... மேலும் பார்க்க

DMK vs Congress: டெல்லி டு சென்னை... கே.சி வேணுகோபால் வருகையின் அஜெண்டா என்ன? | பரபரக்கும் பவன்

தமிழக காங்கிரஸில் இப்போது இரண்டு கோஷ்டிகள் மல்லுக்கட்டுகின்றன. கே.சி.வேணுகோபால், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி தரப்போ, "40 முதல் 70 தொகுதிகள்வரை வேண்டும்; இல்லையெனில் அமைச்சரவையில் அதிகாரப் பங்கு வேண்டும்... மேலும் பார்க்க

`இன்னும் இரண்டே மாதங்களில் எம்.எல்.ஏ' - குலுங்கி சிரித்த மேயர் பிரியா - மாநகராட்சி கூட்டத்தில் கலகல!

மேயர் பிரியா தலைமையிலான மாநகராட்சிக் கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் இன்று நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் ஐ.யூ.எம்.எல் கட்சியின் 61 வது வார்டு கவுன்சிலர் பாத்திமா முஷாபர், `மேயருக்கு எம்.எல்.ஏவாக ப்ரம... மேலும் பார்க்க

`விஜய் அறையிலேயே உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்வது சரியா?' - செல்லூர் ராஜூ கேள்வி

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் 63 வது வார்டு ஈபி காலனியில் புதிய நியாய விலைக் கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார்.அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும... மேலும் பார்க்க

சீமான் போட்டியிடும் தொகுதிக்கு பாஜக பொறுப்பாளராகும் அண்ணாமலை - அதிர்ச்சியில் நாதக முகாம்!

சீமான் போட்டியிடுவதாக கூறப்படும் காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு பா.ஜ.க-வின் தேர்தல் சுற்றுபயண பொறுப்பாளராக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டிருப்பது, நாம் தமிழர் கட்சி முகாமில் பேசுபொர... மேலும் பார்க்க