செய்திகள் :

சென்னை: நண்பரின் பேச்சைக் கேட்டுப் பிரிந்த காதலி; நண்பரின் மனைவிக்கு மிரட்டல் விடுத்த இளைஞர்

post image

சென்னை, கோடம்பாக்கம், சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின் மனைவி சர்மிளா (24). கார்த்திக்கும் சூளைமேடு பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த அருணும் சிறு வயது முதல் நண்பர்களாக இருந்து வந்தனர்.

அருண் மீது திருட்டு, வழிப்பறி, அடிதடி உட்பட 6 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அருண், அந்தப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். திடீரென அருணின் காதலி அவரைப் பிரிந்து சென்றுவிட்டார். அதனால் மனவேதனையடைந்த அருண், காதலியின் பிரிவுக்கு என்ன காரணம் என விசாரித்தார்.

அப்போது, தன்னைப் பற்றி காதலியிடம் தன்னுடைய நண்பன் கார்த்திக், தவறாகப் பேசிய தகவல் அருணுக்குக் கிடைத்தது. அதனால் கார்த்திக் மீது கடும் கோபத்திலிருந்தார் அருண்.

காதல் (representational image)

இதையடுத்து 13.01.2026-ம் தேதி கார்த்திக்கைத் தேடி அவரின் வீட்டுக்குச் சென்றார் அருண். அப்போது வீடு பூட்டியிருந்தது. உடனே அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது சூளைமேடு, ஶ்ரீராமபுரம் மெயின் ரோட்டில் உள்ள கார்த்திக்கின் மாமியார் வீட்டுக்கு கார்த்திக் குடும்பத்தோடு சென்ற தகவல் கிடைத்தது.

உடனே அங்கு சென்ற அருண், கார்த்திக்கின் மனைவி சர்மிளாவிடம் கார்த்திக் எங்கே என்று விசாரித்திருக்கிறார். 'என்னுடைய காதலி பிரிந்து சென்றதற்கு கார்த்திக்தான் காரணம். அவனைக் கொல்லாமல் விடமாட்டேன்' என அருண் கூறியிருக்கிறார்.

அதனால் சர்மிளாவுக்கும் அருணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே கோபத்திலிருந்த அருண், நண்பன் கார்த்திக்கின் மனைவி சர்மிளா, அவரின் அம்மா ஆகியோரை கைகளால் தாக்கியதோடு, 'உங்களையும் கொலை செய்துவிடுவேன்' என மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

பின்னர் நடந்த சம்பவம் குறித்து சர்மிளா சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி, அருணைக் கைது செய்தனர்.

நெல்லை: பாஜக நிர்வாகியின் மாமியாரைக் கட்டிப்போட்டு நகை கொள்ளை; எச்சரிக்கும் போலீஸ்; என்ன நடந்தது?

நெல்லை மாவட்டம், சுத்தமல்லியைச் சேர்ந்தவர் சன்னாசி. இவர், பா.ஜ.க மாவட்ட வர்த்தகப் பிரிவு அணியின் செயலாளராக உள்ளார். இவர், தனது குடும்பத்துடன் சென்னையில் தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.இதனால், ... மேலும் பார்க்க

நெல்லை: தங்கை முறையில் வரும் பெண் மீது காதல்; எதிர்த்த சித்தப்பா வெட்டிக் கொலை; என்ன நடந்தது?

நெல்லை மாவட்டம், முக்கூடலை அடுத்த அடைச்சாணியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் அப்பகுதியில் டூவீலர் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று காலையில் அடைச்சாணி அருகேயுள்ள பாலத்திற்குச் செல்லும் வழி... மேலும் பார்க்க

நெல்லை: திடீர் சோதனை... கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் சிக்கியது எப்படி?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகரில் 600 போலீஸார் கண்காணிப்பு மற்றும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் மூலம் நெல்லைக்கு நாட்டுத்துப்பாக்கி ஒன்று அனுப்பப்... மேலும் பார்க்க

சென்னை: செக்ஸ் டார்ச்சர்; மர்ம உறுப்பை வெட்டி இளைஞர் கொலை - சிறுவனுடன் கைதான தோழிகள்

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார் (22). கொத்தனார் வேலை செய்து வந்த இவர், சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த ரக்சிகா என்பவரைக் காதலித்தார். ஆனால் இவர்களுக்குள் கருத்துவ... மேலும் பார்க்க

வேலூர் CMC மருத்துவர் வீட்டில் ED ரெய்டு - சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் தொடர்பா?

வேலூரில் உள்ள பிரபல சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்காக தோட்டப்பாளையம் பகுதியில் தனி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் கேரளாவை சேர்ந்த டாக்டர் பீஜியன் என்பவர் தங்கி இருந்த வீ... மேலும் பார்க்க

சென்னை: அதிமுக பகுதிச் செயலாளர் தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவா?

சென்னை ஜாபர்கான்பேட்டை, பள்ளிக்கூட 6-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார் (47). இவர் அதிமுக சைதை மேற்கு பகுதி செயலாளராக இருந்து வந்தார். 16-ம் தேதி பகுதியில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளுடன் சேர்ந... மேலும் பார்க்க