"வெற்றிப் படைகள் எப்போதும் உங்களுடன் தொடரட்டும்"- விஜய்யை நேரில் சந்தித்தது குறி...
சென்னை: பிரமாண்டமாய் நடைபெற்ற சலானி ஜுவல்லரி மார்ட்-ன் 13வது ஆண்டு விழா; ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு
மக்களின் நன்மதிப்பையும் பேராதரவையும் பெற்ற தி.நகர் சலானி ஜுவல்லரி மார்ட்-ன் 13வது ஆண்டு விழா, நேற்று பிரமாண்டமாய் ஹோட்டல் கிராண்ட் செர்டன்-ல் நடைபெற்றது.
மதுரை மற்றும் பாண்டிச்சேரி கிளைகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வரவழைக்கப் பெற்று, அவர்களுடன் சென்னை கிளை நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக திரு.ரவி, Ex IPS, திரு.ஐசரி கணேஷ், வேல்ஸ் நிறுவனத்தின் தலைவர், திரு.விக்கிரமராஜா, தலைவர்- வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேடை பேச்சாளர் மதுரை ராமகிருஷ்ணன் அவர்கள், ‘வேலையை காதலி’ என்ற தலைப்பில் பேசி ஊழியர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்த ஆண்டு விழாவின் ஓர் அங்கமாக, 56 ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது, முத்தாய்ப்பாக நிறுவனத்தின் எட்டு ஊழியர்களுக்கு 15 லட்சம் மதிப்புள்ள பிளாட் (காலி நிலம்) சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது.
சிறப்பு பரிசைப் பெற்றவர்கள், ஆனந்த கண்ணீரோடு நன்றி கூறினார்.
விஜய் டிவி புகழ் திரு. ஈரோடு மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தார்.
ஊழியர்கள் அனைவரையும் சலானி ஜுவல்லரி மார்ட் நிறுவனத்தின் தலைவர் திரு.ஜெயந்திலால் சலானி, திருமதி.ஹேமலதா ஜெயந்திலால், நிர்வாக இயக்குநர்கள் திரு.ரிஷப் சலானி, திரு.கௌதம் சலானி, திரு.ஸ்ரீபால் சலானி ஆகியோர் வரவேற்று, இந்த ஆண்டு விழாவை புதியதாய் ஒளிரச் செய்தனர்.


















