செய்திகள் :

'சென்னை முழுவதும் குடிநீரில் மலம் கலப்பு' - திமுக கவுன்சிலரின் பகீர் குற்றச்சாட்டு

post image

சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் வே.ராஜன் பேசுகையில், ''சென்னை முழுவதும் மக்கள் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்திருக்கிறது'' எனக் கூறி அதிர்ச்சியூட்டினார்.

ராஜன்
ராஜன்

இதுசம்பந்தமாக அவர் பேசுகையில், ''சென்னையில் மக்களுக்கு குடிநீர் வாரியம் விநியோகிக்கும் குடிநீரில் மலம் கலந்திருக்கிறது. எங்களின் மண்டலம் 11 இல் தான் இதைக் கண்டடைந்தோம். எங்களுக்கும் மண்டலம் 10 இல் இருந்துதான் தண்ணீர் வருகிறது.

எங்களின் மண்டல அலுவலர்கள் துரிதமாகச் செயல்பட்டதால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் தடுத்தோம். எங்களிடம் அந்தக் தண்ணீரை லேப்பில் சோதித்து எடுக்கப்பட்ட ரிப்போர்ட் இருக்கிறது. அதில் E.Coli என்கிற பாக்டீரியா இருப்பது தெரிய வந்திருக்கிறது. அந்தப் பாக்டீரியாவால் காய்ச்சல், மஞ்சள் காமாலை, தீவிர வயிற்றுப் போக்கு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகிறார்.

ராஜன் கொடுத்த ரிப்போர்ட்
ராஜன் கொடுத்த ரிப்போர்ட்

நீங்களும் நானும் காலையில் குடித்துவிட்டு வந்த தண்ணீர் மலம் கலந்ததாக இருக்கலாம். மலம் கலந்த தண்ணீரில் குளித்திருக்கலாம். சென்னையின் 15 மண்டலங்களிலும் இந்தப் பிரச்னை இருக்கிறது. மாநகராட்சி ஆணையர் இதில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி நிர்வாகத்துறை முதல்வரிடம் இருக்கிறது. மெட்ரோ வாட்டரும் அவரின் துறையின் கீழ்தான் வருகிறது. இப்போதைய முதல்வர் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மிக மோசமாக அந்தத் துறையைக் கையாள்கிறார்'' என்றார்.

"அம்பேத்கரின் சட்டத்திற்கு காக்கி ட்ரவுசர் போட்ட அமைச்சர்"- நிர்மல் குமாருக்கு அன்பில் மகேஸ் கண்டனம்

இன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசினார். அந்த உரையில், முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுகத் தலைவர் ஸ்டாலின் பெண்களை இழிவாகப் பேசியதால்தான் மிசாவில் கைதா... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: `கள்ளச்சாராய மரணங்களுக்கு அதிகாரிகளே காரணம்!’ - கோகுல்தாஸ் அறிக்கை சொல்வதென்ன ?

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி அதிகாலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஒன்று, இரண்டு என மெல்லத் தொடங்கிய உயிரிழப்புகள், அன்று நள்ளிரவைத் தாண்டுவதற்குள் கருணாபுரம... மேலும் பார்க்க

"எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும்..!"- முதல்வர் விஜய் விளக்கம்

நேற்று (செப்.7) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். சர்க்காரியா கமிஷன், ... மேலும் பார்க்க

மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக-வில் சீட் வார்... மரகதம் குமரவேலுக்கு எதிராக உருவாகும் ரேஸ்!

தமிழகத்தில் காலியாக இருக்கும் ஏழு தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். அந்த இரண்டு தொகுதிகளிலும் எம்.எல்.ஏ-க்களாக இருந்து, பத... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சியினர் அதிமுகவினரை தாஜா செய்கிறார்கள்; இடைத்தேர்தலில் நாங்கள்..!' - எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். "இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளும் (மதுராந்தகம், தாராபுரம்) ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்ற இடங்கள்... மேலும் பார்க்க

`நீதி கேட்கும் அதிமுக; குறைகூறும் திமுக... நம்பிக்கையில் தவெக' - இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கும்?

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்க... மேலும் பார்க்க