இலங்கைத் தமிழா்களுக்கு ரூ.6.20 கோடியில் வீடுகள்: பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு
சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல், இண்டிகோ விமான சேவைகள் ரத்து
சென்னை: கன மழை காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஃபென்ஜால்’ புயல் புதுச்சேரிக்கு கிழக்கே 150 கி.மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீட்டர் தொலைவில் நிலைக் கொண்டுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருவதால், சென்னை விமான நிலையம் வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தது. இதே நிலை தொடர்ந்து நீடித்ததை அடுத்து, வேறு விமாந நிலையங்களுக்கு விமானத்தை திருப்பிட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், புயல் எச்சரிக்கை மற்றும் கனமழை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி செல்லும் 18 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை, திருச்சி மற்றும் சேலத்தில் இருந்து சென்னை வரும் விமானங்கள் மற்றும் மங்களூரு மற்றும் திருச்சியிலிருந்து சென்னை வரும் விமானங்கள்
இதையும் படிக்க |வெளுத்து வாங்கும் மழைக்கு இடையே எப்படி இருக்கிறது சென்னை?
சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் இருந்து சனிக்கிழமை எந்த விமானங்களும் இயக்கப்படாது எனவும் அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்த விமானம் பெங்களூருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இண்டிகோ விமான நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேபோல கொல்கத்தா, ஹைதராபாத், புவனேஸ்வா், புணே நகரங்களுக்கு செல்ல வேண்டிய 9 ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் விமானங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும் சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை மாலை 5 மணி வரை எந்த விமானங்களும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.