செய்திகள் :

சேலத்தில் இன்று பேசுகிறார் விஜய் - சீலநாயக்கன்பட்டியில் ஏற்பாடுகள் தீவிரம்

post image

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைவராலும் உற்று நோக்கப்பட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த நிகழ்ச்சி இன்று சேலத்தில் நடைபெறுவது அரசியல் தளத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் தவெக கூட்டம்

கரூர் சம்பவ வழக்கு, சிபிஐ விசாரணை, ஜனநாயகன் படம் வெளியிடுவதில் சிக்கல் என்று பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்தாலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தவும், பரப்புரை செய்யவும் தவெக தலைவர் விஜய் இன்று சேலம் வருகிறார்.

விமானம் மூலம் இன்று மதியம் சேலம் வரும் விஜய், கட்சி நிர்சாகிகள் சந்திப்பு நடக்கும் சீலநாயக்கன்பட்டி மைதானத்திற்கு வாகனத்தில் வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலையிலிருந்தே சேலத்தில் தவெக தொண்டர்கள் குவியத் தொடங்கிவிட்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறையின் அனுமதியை பெற்ற தவெக தலைமை நிர்வாகிகளுடன் இணைந்து மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

சேலம் தவெக கூட்டம்

சீலநாயக்கன்பட்டியில் பத்து ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரம் நிர்வாகிகள் அமரும் வகையிலும் அவர்களுக்கு ஸ்நாக்ஸ் குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

மேலும் நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்துக்கு கட்சி நிர்வாகிகள் சிரமமில்லாமல் வந்து செல்லும் வகையில் ஆண்கள், பெண்கள் என தனித்தனி பாதைகளுடன், தலைமை நிர்வாகிகள் மற்றும் விஜய் வந்து செல்ல தனிப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

வருகின்றவர்ளுக்கு உதவவும், கூட்டத்தினரை நெறிப்படுத்தவும் ஆயிரக்கணக்கான பாதுகாவலர்களும், தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்

ஆம்புலன்ஸ்களுடன் 15 டாக்டர்கள் கொண்ட டீம் முதலுதவி சிகிச்சை செய்வதற்காக தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃகியூ ஆர் குறியீட்டுடன் அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும், அனுமதி இல்லாதவர்களும் பொதுமக்களும் வர வேண்டாம்' என்று மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

'ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக் vs தேர்தலுக்கான லஞ்சம்' ஊடகவியலாளர்களின் பார்வையில் மகளிருக்கு ரூ.5000

முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், 'தேர்தல் நெருங்குவதால் இந்த தி... மேலும் பார்க்க

`ஸ்டாலினுக்குத் தோல்வி பயம்; வாக்குக்காக உரிமைத்தொகையை முன்பணமாகக் கொடுக்கிறார்’ - எடப்பாடி பழனிசாமி

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர் பேசியதாவது, `` `சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்... மேலும் பார்க்க

TVK: விஜய்யின் சேலம் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். சேலம், சீலநாயக்கன்பட்டியில் இன்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது. திறந்தவெளி பொதுக் கூட்டமாக நடைபெறும் இதில் 5,00... மேலும் பார்க்க

'வரி வேண்டாம்' சொந்தக் கட்சியினரே எதிராக வாக்கு; 'பார்த்துக்கொள்கிறேன்' மிரட்டும் ட்ரம்ப் |Explained

'தன் கையே கண்ணைக் குத்திய கதை போலத் தான் தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. உலக நாடுகளைத் தனக்குப் பணிய வைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையிலெடுத்த அஸ்திரம் 'வரி'. இதற்கு ட்ரம்... மேலும் பார்க்க

TVK: சேலம் மேடைக்கு வந்த விஜய்; தொடங்கியது தவெக நிர்வாகிகள் கூட்டம்!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை தவெக விஜய் நடத்தி வருகிறார். கடந்த 2ஆம் தேதி பனையூரில் ந... மேலும் பார்க்க

விஜய் : 'இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன?' | மகளிருக்கு ரூ.5000

முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், 'தேர்தல் நெருங்குவதால் இந்த... மேலும் பார்க்க