செய்திகள் :

சேலம்: `56 அடி உயரம்’ - பிரமாண்ட ராஜமுருகன் சிலை பிரதிஷ்டை!

post image

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே அணைமேடு பகுதியில் அருள்மிகு ராஜ முருகன் சிலை 56 அடியில் பிரம்மாண்ட அமைக்க திட்டமிட்டு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக முருகன் சிலை அமைக்கப்பட்டபோது முனியப்பன் போன்று இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இதனை அடுத்து கோவில் நிர்வாகம் 56 அடி உயரத்தில் அருள்மிகு ஸ்ரீ ராஜமுருகன் சிலையை மாற்றி அமைக்க முடிவு செய்தது.

பின்னர் ஒரு ஆண்டுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த சிலை அமைக்கும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவுபெற்றது. தற்போது கம்பீரமான முறையில் ராஜா அலங்காரத்தில் காட்சி அமைக்கும் விதமாக அமைக்கப்பட்டது, பக்தர்களுக்கு இடையே மிகுந்த வரவேற்பினையும் மகிழ்ச்சியினையும் ஏற்படுத்தியது.

56 அடி முருகர் சிலை

இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் இரண்டாவது அதிக உயரம் கொண்ட மிகப் பிரமாண்ட ராஜமுருகன் சிலைக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதனிடையே கடந்த 17 ஆம் தேதி முகூர்த்தக்கால் நடுதல், கங்கணம் கட்டுதலுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் நேற்றைய தினம் காலை மங்கள இசையுடன் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று இரண்டாம் கால யாக பூஜைகள் நடத்தி, தீபாராதனை உடன் 56 அடி உயரம் கொண்ட ஸ்ரீ ராஜ முருகனுக்கு மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றது. பெரிய கிரேன் வாகனம் மூலமாக முருகன் சிலைக்கு அருகே சென்று மகா கும்பாபிஷேக தீர்த்தம் ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ராஜமுருகனை வழிபட்டனர். பின்னர் தீர்த்தம் மீது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

உங்கள் வாழ்வை மாற்றி வளம் தரும் ராசி தீப வழிபாடு! திருவண்ணாமலை தீபநாள் பரிகாரம்! சங்கல்பியுங்கள்!

உங்கள் வாழ்வை மாற்றி வளம் தரும் ராசி தீப வழிபாடு! திருவண்ணாமலை தீபநாள் பரிகாரம்! சங்கல்பியுங்கள்! 21 தலைமுறைகளுக்கும் நலமும் வளமும் தரக்கூடிய வழிபாடு கார்த்திகை தீப வழிபாடு.முன்பதிவு மற்றும் சங்கல்பம்... மேலும் பார்க்க

`பேரிடரை ஏற்படுத்தி விடாதீர்கள்' - சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கையை குறைத்த கேரளா உயர் நீதிமன்றம்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டலகால மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த 16-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலமாக 20000 பக்தர்களு... மேலும் பார்க்க

கார்த்திகை மாத முதல் நாள்: ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கிய பக்தர்கள் | Photo Album

"சபரிமலை ஐயப்பன் சிலையை திருடாமல் விட்டதற்கு அரசுக்கு நன்றி"- காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் கிண்டல் மேலும் பார்க்க

சபரிமலை: மண்டல பூஜை; 18 மணி நேரம் நடை திறந்திருக்கும் - தினமும் 90,000 பக்தர்களுக்கு அனுமதி!

கார்த்திகை மாதம் 1-ம் தேதி பிறந்ததை ஒட்டி, இன்று முதல் 41 நாட்கள் நடைபெறும் மண்டலகால பூஜைகளுகாக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதை முன்னிட்டு சபரிமலை கோயில் திருநடை நேற்று ம... மேலும் பார்க்க

தீமைகளை அழித்து சகல நன்மைகளையும் அளிக்கும் சண்டி ஹோமம்! ஆயுளில் ஒருமுறையாவது ஏன் செய்ய வேண்டும்?

தீமைகளை அழித்து சகல நன்மைகளையும் அளிக்கும் சண்டி ஹோமம்! ஆயுளில் ஒருமுறையாவது ஏன் செய்ய வேண்டும்? தாருகாவனம் சித்தர் பீடத்தில் 2025 நவம்பர் 17-ம் நாள் சண்டி ஹோமம் நடைபெற உள்ளது.முன்பதிவு மற்றும் சங்கல்... மேலும் பார்க்க