செய்திகள் :

"ஜந்தர் மந்தர் இளைஞர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறேன்" - நெல்லையில் ஆளுநர் அர்லேகர் பேச்சு

post image

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் பேசிய அவர், "பட்டம் பெறும் அனைத்து மாணவர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். ஏனெனில், உங்கள் அனைவரையும் இந்த அரங்கிற்குள் அமர வைக்க இயலவில்லை.

உங்களில் சிலர் அரங்கிற்கு வெளியே இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன். உங்கள் அனைவரையும் இங்கே அமர வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டியது இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகிய எனது பொறுப்பாகும். எனவே, மதிப்பிற்குரிய துணைவேந்தரிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்: அடுத்த முறை நாம் இன்னும் பெரிய அரங்கைப் பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் அனைவரும் நம் நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல, நிகழ்காலமும்கூட. நமது இளம் தலைமுறையைப் பற்றி மக்கள் தவறாகப் பேசுகிறார்கள். இக்காலத்தில் அவர்களை 'ஜென்சி' என்று அழைக்கும் போக்குகூட காணப்படுகிறது. சமீபத்தில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நடந்த நிகழ்வுகளை நாம் பார்த்தோம்; அங்குள்ள தலைமுறையினரையும், எனது திறமையான இளம் மாணவர்களான உங்களையும் நான் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

பட்டம் பெறுவது வரையிலும், உங்கள் பொறுமைக்கான ஒரு சோதனையாக இருந்தது. நீங்கள் நீண்ட காலமாக இதற்காகக் காத்திருந்தீர்கள். பட்டத்தை வேந்தர் (Chancellor) உங்களுக்கு வழங்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது தவறானதா? நிச்சயமாக இல்லை. அது உங்கள் உரிமை. நீங்கள் அதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறீர்கள். படித்துத் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள். எனவே, வேந்தரால் நீங்கள் புறக்கணிக்கப்படக் கூடாது. உங்கள் முயற்சிகளை நான் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன்.

இந்த விழாவில் பங்கேற்கும் உங்கள் எண்ணிக்கை சுமார் 800 முதல் 900 வரை இருக்கும் என்று நினைக்கிறேன். இன்றைய இளம் தலைமுறையினர் மக்கள், பெற்றோர், ஆசிரியர்கள், சமூகம் மற்றும் நாடு ஆகியவற்றைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். உங்களை இங்கே வரவேற்பது எனக்குக் கிடைத்த பெரும் கௌரவம்; உங்களில் பலர் என்னிடம் 'வணக்கம்' என்றீர்கள்.

சிலர், 'உங்கள் கைகளால் பட்டம் பெறுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்' எனத் தெரிவித்தீர்கள். இதை அனைவரும் பாராட்ட வேண்டும். இதில் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும். உங்களுக்குத் தேவையானவை மற்றும் நீங்கள் விரும்புபவை அனைத்தையும் உங்களுக்கு வழங்குவதே எனது முக்கிய கடமையாகும். உங்களைச் சந்தித்து, உங்களைப் புரிந்துகொள்வதே எனது நோக்கம்.

2047-ம் ஆண்டு என்பது இன்றிலிருந்து சரியாக 20 ஆண்டுகள் கொண்ட ஒரு காலக்கட்டம். அதற்குள் நமது பிரதமரின் கனவு மட்டுமல்லாமல் நம் அனைவரின் கனவும் நனவாகப் போகிறது. இதை நோக்கி நாம் எவ்வாறு முன்னேறுவது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும. தாமதிக்காமல், நம் மக்கள் மற்றும் நம் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டும். நாட்டுக்காக நான் என்ன செய்யப் போகிறேன் என்று நீங்களே முடிவு செய்யுங்கள். உங்களிடம் திறமை இருக்கிறது.

வெறும் தகவல்கள் மட்டுமல்லாமல் உண்மையான அறிவும் உங்களிடம் உள்ளது. எனவே, அதைச் செயல்படுத்த முயற்சி செய்யுங்கள். நம்மால் மட்டுமே இதைச் செய்ய முடியும். அதற்காகத்தான் நான் இன்று உங்களைச் சந்திக்க இங்கு வந்துள்ளேன். வெறும் பேச்சாக மட்டும் பேசுவதில் எனக்குத் திருப்தி இல்லை. உங்களுடன் ஒரு கலந்துரையாடலை மேற்கொள்ளவும், மீண்டும் நேரில் வந்து உங்களுடன் நாள் முழுவதும் பேசவும் நான் விரும்புகிறேன். காரணம் நீங்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம்" என்று ஆளுநர் அர்லேகர் பேசினார்.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க