செய்திகள் :

'ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய பதவி வழங்கிய முதல்வர் விஜய்!' - விவரம் என்ன?

post image

ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளரான கே.வெங்கட நாராயணாவுக்கு தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி பொறுப்பை கொடுத்திருக்கிறார் முதல்வர் விஜய்.

வெங்கட நாராயணா
வெங்கட நாராயணா

திரையுலகில் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தை தயாரித்திருந்தது கர்நாடகாவை சேர்ந்த கே.வி.என் நிறுவனம். படத்தை கடந்த பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், படத்தின் தணிக்கையில் ஏற்பட்ட பிரச்னையால் அந்தப் படம் இன்னும் வெளியாகாமல் முடங்கி கிடக்கிறது. இடையில் சட்டமன்றத் தேர்தல் நடந்து விஜய் முதல்வரும் ஆகிவிட்டார். விஜய் ஆட்சியமைக்க உரிமைகோரி ஆளுநரை சந்தித்த போதும் கே.வி.என் நிறுவனத்தின் உரிமையாளர் கே.வெங்கட நாராயணா உடன் இருந்தார். இந்நிலையில், இன்று தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

ஆளுநருடனான சந்திப்பில் வெங்கட நாராயணா
ஆளுநருடனான சந்திப்பில் வெங்கட நாராயணா

தமிழக அரசின் அறிவிப்பு வெளியாகி சில நிமிடங்களே ஆகும் நிலையில், முதல் ஆளாக இந்த நியமனத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.

மீண்டும் பற்றி எரியும் நேபாள் - தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராகவே போராடும் Gen Z | என்ன காரணம்?

ஒரு தீப்பொறி ஒரு பெருங்காட்டை எரிப்பதற்கு போதுமானது என்பார்கள். அதுபோல, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 25 வயது இளைஞர் ஒருவரின் தற்கொலை, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி, மக்கள் போராட்டத் தீயை மூட்டி... மேலும் பார்க்க

`இந்து ராஷ்டிரத்தால் யாருக்கும் ஆபத்தில்லை; நம் மூதாதையர் ஒன்றே'- ராம்தேவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். "நம்... மேலும் பார்க்க

துணைவேந்தர் தேடல் : 'மாநில உரிமைகளைத் தமிழக அரசு தாரை வார்க்கக் கூடாது!' - அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான தமிழக அரசின் சட்டத் திருத்த முயற்சியை... மேலும் பார்க்க

`` `கொத்து புரோட்டா' என அநாகரிகமாகப் பேசுகிறார்; இது தொடந்தால்..!" - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மைக்கு மாறாகவும், வழக்கைப் பாதிக்கக... மேலும் பார்க்க

ஈரான் Hitlist-ல் இருக்கும் தலைவர்கள்: ட்ரம்ப், நெதன்யாகு, மெலோனி... - ஈரானிய செய்தித்தாளின் லிஸ்ட்!

ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது. இந்த நேரத்தில், ஈரானில் உள்ள 'ஹம்ஷஹ்ரி' என்னும் செய்தித்தாள் ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனியின் மரணத்திற்கு பழி தீர்க்க ஈரான் குற... மேலும் பார்க்க