செய்திகள் :

ஜனநாயகன் படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய உள்ளூர் தொலைக்காட்சி – உரிமையாளர் கைது, அலுவலகத்திற்கு சீல்!

post image

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் மத்திய தணிக்கை சான்று பெறாமல் நிலுவையில் இருந்து வரும் நிலையில், சட்ட விரோதமாக ஆன்லைனில் கசிந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் ராசி பிரைம் மூவி என்ற உள்ளூர் சேனலில் நேற்று முன்தினம் ஜனநாயகன் திரைப்படம் சட்டத்திற்கு புறம்பாக வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து த.வெ.க. கோவை புறநகர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் மோகனப்பிரியா கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணையில், மத்திய தணிக்கை குழுவின் சான்றுக்கு காத்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக பகிரப்பட்ட லிங்க் மூலம், ராசி பிரைம் மூவி என்ற உள்ளூர் சேனலில் வெளியிடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (44) என்பவரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

மேலும், படத்தை சட்டவிரோதமாக வெளியிட பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர், 5 ஹார்ட் டிஸ்க்கள்  உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, சேனலின் நிறுவன அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. இதுபோல இணையத்தின் மூலம் திரைப்படங்கள் மற்றும் பிற பதிப்புரிமை கொண்ட உள்ளடக்கங்களை சட்டத்திற்கு புறம்பாக பகிர்வு செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கைநழுவிய வேட்டை... கால் நழுவிய சிங்கம்! 15 அடி ஆழக் கிணற்றில் ஒரு மணி நேரத் திக் திக்! | Viral Video

வேட்டைக்காகப் பாய்ந்த வேகம், அடுத்த நொடியே ஒரு சிங்கத்தின் வாழ்வா சாவா போராட்டமாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில், ஒரு எருமை மாட்டை வேட்டையாட அந்த ஆசிய சி... மேலும் பார்க்க

`பிரேக்-அப்பை விடவும் அதிக வலி...'- 60 நிமிடங்களில் கைநழுவிய வாடகை வீடு; இளம்பெண்ணின் வைரல் பதிவு!

இது பெங்களூரு பாஸ்... இங்கே ஆள விடுறதை விட வீடு போனா வலி அதிகம்! - வாடகை வீட்டின் மறுபக்கத்தை பகிர்ந்த பெண்ணின் குமுறல்!இந்தியாவின் சிலிக்கான் வேலி, கனவுகளின் தலைநகரம் என பல பெயர்களில் அழைக்கப்படும் ப... மேலும் பார்க்க

சம்பளப் பிரச்னை; போர்க்களமாக மாறிய நொய்டா; போராட்டத்தில் ஈடுபட்ட 300 தொழிலாளர்கள் கைது

டெல்லி அருகில் உள்ள நொய்டாவில் மாருதி காருக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் அதிக அளவில் இருக்கின்றன. இதுதவிர நொய்டா மற்றும் காசியாபாத்தில் அதிக அளவில் கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ப... மேலும் பார்க்க

டொனால்டு ட்ரம்ப்பின் சரச்சைப் பதிவு; படத்தை நீக்கியதற்கு விளக்கமளித்த ட்ரம்ப்

அமெரிக்கா மத்திய கிழக்கில் உள்ள ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு உலக நாடுகள் ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டன. இஸ்ரேலும், அமெரிக்காவும் இப்போரில் பின்னடைவைச் சந்தித்ததாகவே உலக நாடுகள் கருதுகின்றன. மற்றொருப... மேலும் பார்க்க

`நண்பர்கள் மஞ்சள் மாத்திரை கொடுத்தார்கள்' இசை நிகழ்ச்சியில் போதை; மாணவர்கள் உயிரிழப்பு

மும்பை கோரேகாவ் நெஸ்கோ கண்காட்சி மையத்தில் ''999999999 Music Concert” என்ற பெயரில்இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இதில் தென்... மேலும் பார்க்க

Asha Bhosle: மறைந்த இசை அரசி; அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட ஆஷா போஸ்லே உடல்!

இந்தி உட்பட 20க்கும் மேற்பட்ட மொழிப் படங்களில் பாடியிருக்கும் பாடகி ஆஷா போஸ்லே நேற்று மும்பை மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். மறைந்த இசைக்குயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரா முத... மேலும் பார்க்க