செய்திகள் :

ஜனநாயகன்: `ராணுவ சின்னங்கள், மத நல்லிணக்கத்துக்கு ஊறு..!' - உயர் நீதிமன்ற தீர்ப்பு விவரங்கள்!

post image

விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது.

ஆனால் படத்தை பார்த்த தணிக்கை வாரியம், சென்சார் வழங்க மறுத்து மறு ஆய்வு செய்ய பரிந்துரை அளித்தது. இதை எதிர்த்து, அப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என். நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, உடனடியாக சென்சார் வழங்க உத்தரவிட்டு, மறுஆய்வு பரிந்துரையை ரத்து செய்தார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது.

உயர் நீதிமன்றம்

இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடைபெற்றது.

தயாரிப்பு நிறுவனம் மற்றும் தணிக்கை வாரியத்தின் வாதங்களை கேட்ட நீதிமன்றம் திரைப்படத்திற்கு, தயாரிப்பாளர்கள் சான்று பெறும் முன் வெளியீட்டு தேதியை எப்படி அறிவிக்க முடியும் என கேள்வி எழுப்பியது.

மேலும், ஒரே நாளில் அனைத்து நீதிமன்ற நடைமுறைகளையும் முடித்து, உத்தரவு பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜன.27) தீர்ப்பு வழங்கியது.

ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்கும்படி, சென்சார் போர்டுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

ஜனநாயகன்

படத்தில் ராணுவ சின்னங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அன்னிய சக்திகள் நாட்டில் கலவரம் ஏற்படுத்துவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தீவிரமான புகார் வந்துள்ளதால், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தீவிரமான புகார் கூறப்பட்டுள்ள நிலையில், பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்காமல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என குறிப்பிட்டனர்.

மேலும், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்து வழக்கில் கோரிக்கையை திருத்தம் செய்து பட நிறுவனம் மனுத்தாக்கல் செய்யலாம். அந்த மனுவுக்கு சென்சார் போர்டு பதிலளிக்க அவகாசம் வழங்கி தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

'மூன்றாவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு' - சென்னை உயர் நீதிமன்றம்

மூன்றாவது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பி.மங்கையர்கரசி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஷமிம் அக... மேலும் பார்க்க

சாத்தான்குளம் கொலை வழக்கு: கைதானவர்களுக்கு மருத்துவ விசாரணை அறிக்கை வழங்க CBI மறுப்பு; காரணம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ். இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஊரடங்கு நேரம் தாண்டி அவர்கள் நடத்தி வந்த செல்போன் கடையைத் திறந்து வைத்... மேலும் பார்க்க

ஜனநாயகன்: தணிக்கை வாரியம் vs தயாரிப்பு நிறுவனம் - இரு தரப்பிலும் முன்வைக்கப்பட்ட வாதங்கள் என்னென்ன?

நடிகர் விஜய்-ன் ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக சென்சார் சான்று வழங்கும்படி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம... மேலும் பார்க்க

ஜனநாயகன் தணிக்கை சான்று விவகாரம்: 'அங்கு சென்று சொல்லுங்கள்'- வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

தணிக்கை சான்றிதழ் கேட்டு ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் கடைசி திரை... மேலும் பார்க்க

ஜனநாயகன்: சென்சார் சர்டிபிகேட் சிக்கல்; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் - விரிவான தகவல்!

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் கடந்த 5-ந்தேதி பரிந்துரை செய... மேலும் பார்க்க

ஶ்ரீதர் வேம்பு விவாகரத்து வழக்கு: 1.7 பில்லியன் டாலர் பாண்ட் இழப்பீடு வழங்க வேண்டுமா?!

2021-ம் ஆண்டு விவகாரத்திற்காக விண்ணப்பித்திருந்தார் ஜோஹோவின் நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு. அந்த வழக்கு இன்னமும் கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், அமெரிக்க நீதிமன்றம் ஶ்ரீதர்... மேலும் பார்க்க