செய்திகள் :

ஜல்லிக்கட்டு குறித்து சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சு; மாடுபிடி வீரர்கள் எதிர்ப்பு; எம்எல்ஏ விளக்கம்

post image

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் சோழவந்தான் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ. வி.எம்.கருப்பையா, வாடிவாசல் மற்றும் ஜல்லிக்கட்டு குறித்து பேசிய நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத்தில் பேசிய எம்.எல்.ஏ. கருப்பையா, “வாடிவாசலில் இறங்கி ஜல்லிக்கட்டு விளையாடுவதால் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிகிறது” எனக் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கருத்துக்கு அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எம்.எல்.ஏ. கருப்பையாவின் பேச்சு குறித்து மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்ப்பவர்கள் கூறுகையில், "சர்க்கரை ஆலை தொடர்பாக அவர் சட்டமன்றத்தில் முன்வைத்த கருத்து சரியானதாக இருக்கலாம். ஆனால், அதற்காக தமிழர்களின் பாரம்பர்யத்தையும் வீர விளையாட்டையும் பிரதிபலிக்கும் ஜல்லிக்கட்டை, 'இளைஞர்களின் வாழ்க்கையைச் சீரழிகிறது' என்ற கருத்துடன் இணைத்துப் பேசியது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வார்த்தையை எம்.எல்.ஏ. தவிர்த்திருக்கலாம். ஜல்லிக்கட்டின் மீது ஆர்வம் கொண்ட ஏராளமான இளைஞர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களின் மனதை இந்தக் கருத்து புண்படுத்தியுள்ளது" என தெரிவித்தனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

இது குறித்து  எம்.எல்.ஏ. வி.எம்.கருப்பையா பேசிய போது, “நானே ஒரு மாடுபிடி வீரன். ஜல்லிக்கட்டில் ஈடுபட்டவன். அப்படியிருக்க நான் ஜல்லிக்கட்டைக் கொச்சைப்படுத்திப் பேசுவேனா? ஜல்லிக்கட்டைக் கொச்சைப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.

வாடிவாசல் மற்றும் ஜல்லிக்கட்டு கலாசாரத்தை 'விளையாட்டு மைதானம்' என்ற பெயரில் வணிக நோக்கத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுவிடக் கூடாது என்பதே எனது கருத்து. 

பள்ளி மாணவர்கள் தங்களது படிப்பில் கவனம் செலுத்தி, எதிர்காலத்தைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தினேன். 2008-ம் ஆண்டு காலகட்டத்தில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டபோது, அன்றைய மாவட்ட ஆட்சியர் சகாயம் உள்ளிட்டோரின் உதவியுடன் ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்துவதற்கான நடவடிக்கைகளில் நான் ஈடுபட்டு, 2011-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்தேன்.

கருப்பையா
கருப்பையா

நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் இல்லை. எதிர்கால மாணவர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்; தமிழர்களின் பாரம்பர்யம் கட்டிக் காக்கப்பட வேண்டும்; இளைஞர் சமுதாயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். ஒருபுறம், ஜல்லிக்கட்டின் பாரம்பர்யத்தைப் பாதுகாக்க வேண்டும் என மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், மறுபுறம் இளைஞர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டே எனது கருத்தைத் தெரிவித்தேன்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க