செய்திகள் :

ஜெயலலிதா வழங்கிய யானை அகிலாவின் 24வது பிறந்தநாள் விழா; விமர்சையாகக் கொண்டாடிய பக்தர்கள்!

post image

திருச்சி, திருவானைக்காவலில் அமைந்துள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோயிலில் அகிலா என்கிற யானை கோயில் நிகழ்விற்காக ஈடுபட்டு வருகிறது. 

கடந்த 2002 ஆம் வருடம் பிறந்த அகிலா யானையானது கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியின்போது கோயில் பூஜைகள் மற்றும் கோயில் ஆன்மிக பணிக்காக திருவானைக்காவல் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டது.

அகிலா யானை
அகிலா யானை

அந்த யானை அகிலாவிற்கு 24 வயதை அடைந்ததையடுத்து, கோயில் சார்பில் யானைக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு, கோயில் யானை அகிலா அலங்கரிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டது.

பின்னர், கோயில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் யானைக்கு பூஜைகள் நடத்தப்பட்டு கோயில் அதிகாரிகள், யானை பாகன்கள், அர்ச்சகர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் பங்கேற்று யானை அகிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துப்பாடி பின்னர் பழங்கள், காய்கறிகள், கடலை மிட்டாய், கொழுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கி யானையை மகிழ்வித்தனர்.

elephant

இந்த நிகழ்வில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கலந்து கொண்டு யானைக்கு பழங்கள் வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, அங்கு நின்றிருந்த குழந்தைகள் உள்ளிட்ட பலர் யானைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

யானை அகிலா அதற்கு தன் தும்பிக்கை தூக்கி தலையை அசைத்தது. அங்கிருந்தவர்கள் அதைக் கண்டு மகிழ்ந்தனர்.

உத்தரகாண்டின் `கார்த்திக் சுவாமி'- ஈட்டி மலை உச்சியில் அருள்பாலிக்கும் `பால முருகன்' - புராதன கோயில்

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. இதனால் ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்கின்றனர். உத்தரகாண்டில் சௌகம்பா, கேதார்நாத், நீலக... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: `மன்னிப்பு கடிதம் அல்ல; விளக்கம்; நடவடிக்கை உண்டு' - ஆய்வுக்குப்பின் அமைச்சர் ரமேஷ்

திருச்செந்தூரில் விரைவு தரிசனத்திற்காக பக்தர்களிடம் அர்ச்சகர்கள் பணம் பெற்றுக் கொண்டு கோயிலுக்குள் அனுப்புவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், இன்று கோயிலில்... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: ரூ.100 தரிசன கட்டண போலி ரசீது; ரூ.25 லட்சம் மோசடி; பெண் ஊழியர் சிக்கியது எப்படி?

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இக்கோயிலில் பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண வரிசை, முதியோருக்... மேலும் பார்க்க