செய்திகள் :

" 'டபுள் இன்ஜின்' எனும் 'டப்பா இன்ஜின்' தமிழ்நாட்டில் ஓடாது!"- மோடிக்கு ஸ்டாலின் பதிலடி

post image

மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ``தமிழ்நாட்டுக்கு 'டபுள் இன்ஜின்' சர்க்கார் தேவை. மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும். தமிழ்நாட்டிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்" என்றார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்நிலையில் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கும் வகையில் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "பிரதமர் சொல்லும் “டபுள் இன்ஜின்” எனும் “டப்பா இன்ஜின்” தமிழ்நாட்டில் ஓடாது! மாண்புமிகு பிரதமர் அவர்களே… ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… நீங்கள் சொல்லும் “டபுள் இன்ஜின்” மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் “டப்பா இன்ஜின்” நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் NDABetraysTN என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்" என்று கடுமையாக மோடியை ஸ்டாலின் சாடியிருக்கிறார்.

கேரளா: பிரதமர் மோடியை வரவேற்க செல்லாத பா.ஜ.க மேயர் - திருவனந்தபுரத்தில் நடந்தது என்ன?

அம்ருத் பாரத் ரயில் தொடக்கவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக பிரதமர் மோடி இன்று கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் சென்றிருந்தார். திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை கேரள கவர்னர் ர... மேலும் பார்க்க

`என்னால் பலனடைந்த பலர் என்னுடன் நிற்கவில்லை..!' - இணைப்பு விழா ஆலோசனையில் மனம் திறந்த வைத்திலிங்கம்

டெல்டாவில் அதிமுக முகமாக அறியப்பட்ட `சோழமண்டல தளபதி' என கட்சியினரால் அழைக்கப்பட்ட ஓ.பி.எஸ் அணியில் இருந்த வைத்திலிங்கம், அதிலிருந்து விலகி கடந்த 21ம் தேதி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணை... மேலும் பார்க்க

"பங்காளி சண்டை தீர்ந்துவிட்டது; முழு மனதோடு வந்திருக்கிறோம்"- NDA கூட்டத்தில் டிடிவி பேசியது என்ன?

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், "தமிழ்நாட்டில் நடைபெறும் மக்கள் விரோத, குட... மேலும் பார்க்க

`210 இடங்களில் நம் கூட்டணி வெற்றிபெற்று அதிமுக ஆட்சியமைக்கும்!' - NDA கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``இந்திய திருநாடே மதுராந்தகத்தை நோக்கிப் ... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிற பாஜக-வை எமது மக்கள் எப்போதும் ஆதரிக்க மாட்டார்கள்!" - ஜோதிமணி

"எந்த முகத்தை வைத்துக் கொண்டு பா.ஜ.க-வும், நரேந்திர மோடியும் இங்கு வாக்கு கேட்டு வருகிறார்கள்?. தமிழ்நாடே தண்ணீரில் மிதந்தபோது, புயல் வீசியபோது எட்டிக்கூடப் பார்க்காத பிரதமருக்கு இப்போது மட்டும் இங்க... மேலும் பார்க்க