கேரளா: பிரதமர் மோடியை வரவேற்க செல்லாத பா.ஜ.க மேயர் - திருவனந்தபுரத்தில் நடந்தது ...
"பங்காளி சண்டை தீர்ந்துவிட்டது; முழு மனதோடு வந்திருக்கிறோம்"- NDA கூட்டத்தில் டிடிவி பேசியது என்ன?
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், "தமிழ்நாட்டில் நடைபெறும் மக்கள் விரோத, குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துக்காக இந்தக் கூட்டணியில் நாங்கள் வரவேண்டும் என பிரதமர் மோடி விரும்பினார்.

எடப்பாடி பழனிசாமியை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு இந்தக் கூட்டணிக்கு வந்திருக்கிறோம்.
நாங்கள் ஜெயலலிதாவின் தொண்டர்கள், எம்.ஜி.ஆர் வழிவந்தவர்கள். எங்களுக்குள் சண்டை, சச்சரவு இருந்தது உண்மைதான். இப்போது அந்த பங்காளி சண்டை தீர்ந்துவிட்டது.
மனதில் இருந்த கோபங்களை விட்டுவிட்டு, 2021-ல் அமைக்க முடியாமல் போன ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் உருவாக்கிட எந்தவொரு தயக்கமும் இன்றி, எந்த அழுத்தமும் இன்றி அமமுக இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளது.

நமது வெற்றிக்காக அமமுக-வின் ஒவ்வொரு தொண்டரும் பாடுபடுவார்கள் என்று பிரதமருக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் சொல்லிக் கொள்கிறேன். எதிர்ப்பது என்றால் உறுதியாக எதிர்ப்போம்.. ஆதரிக்கிறோம் என்றாலும் முழுமையாக ஆதரிப்போம்" என்று பேசியிருக்கிறார்.













