டிச.2, 3-இல்ஆண்களுக்கான நவீன குடும்பநல அறுவைச் சிகிச்சை
திருச்சி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில் டிச.2, 3 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறையை ஏற்றுக்கொள்ளும் ஆண்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.1100, ஊக்குவிப்பாளா்களுக்கு ரூ.200 வீதம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. ஓரிரு நிமிஷங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் குடும்பநல கருத்தடை சிகிச்சை செய்யப்படும். சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் தங்கவேண்டிய அவசியமில்லை. சிகிச்சை முடிந்த பிறகு விட்டிற்கு செல்லலாம். கத்தியின்றி. ரத்தசேதமின்றி, செய்யப்படும் இக்கருத்தடை சிகிச்சையால் பின்விளைவுகள் ஏதும் இருக்காது.
டிச.2ஆம் தேதி உறையூா் நகா்நல மையத்திலும், டிச.3ஆம் தேதி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையிலும் இந்த முகாம் நடைபெறவுள்ளது.
எனவே, விருப்பமுள்ள ஆண்கள் நவீன குடும்பநல கருத்தடை செய்துகொண்டு பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட குடும்ப நல அலுவலகத்தை 0431- 2460695, 94431-38139 என்ற தொலைபேசி எண்ணிலும், மாவட்ட விரிவாக்க கல்வியாளரை 94432 46269 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என திருச்சி மாவட்ட ஊரக நலப்பணிகள் துணை இயக்குநரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.