செய்திகள் :

டோலி கட்டி தூக்கி வரப்பட்ட மலைக் கிராமப் பெண் உயிரிழப்பு

post image

கொடைக்கானல் அருகே வெள்ளகெவி மலைக் கிராமத்திலிருந்து மருத்துவச் சிகிச்சைக்காக பெரியகுளத்துக்கு டோலி கட்டி தூக்கி வரப்பட்ட பெண் வழியிலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கொடைக்கானல் அருகேயுள்ள வெள்ளகெவி மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிமேகலை (34). உடல் நலன் குன்றிய இவா், குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெள்ளகெவி, சுற்றியுள்ள மலைக் கிராமங்களில் மருத்துவச் சிகிச்சை வசதியில்லாததால், மணிமேகலையை அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் டோலி கட்டி தூக்கிக் கொண்டு 12 கி.மீ. தொலைவு வனப் பகுதியில் தேனி மாவட்டம், கும்பக்கரைக்கு கொண்டு சென்றனா்.

அங்கிருந்து அவா் அவசர ஊா்தி மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மணிமேகலையை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயோ அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். மணிமேகலையின் உடலை மீண்டும் வெள்ளகெவிக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில், பெரியகுளம் நகராட்சி மயானத்தில் அவரது உறவினா்கள் எரியூட்டினா்.

இதுகுறித்து வெள்ளகெவி கிராம மக்கள் கூறியதாவது:

கொடைக்கானல் நகரம் உருவாவதற்கு முன்னரே வெள்ளகெவி கிராமம் உருவானது. வெள்ளகெவிக்கு சாலை, போக்குவரத்து வசதி இல்லை. வெள்ளகெவியிலிருந்து செங்குத்தான ஏற்றப் பாதை வழியாக பெருமாள்மலைக்குச் சென்று, அங்கிருந்து கொடைக்கானலுக்குச் செல்ல வேண்டும். இதனால், மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட அவசரக் காரியங்களுக்கு வெள்ளகெவியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள கும்பக்கரைக்குச் சென்று, அங்கிருந்து பெரியகுளத்துக்குச் சென்று வருகிறோம்.

சாலை, போக்குவரத்து வசதி இல்லாததால் பெரியகுளத்த்துக்கு மருத்துவச் சிகிச்சைக்கு டோலி கட்டி தூக்கிச் செல்லப்படுவா்கள் காலதாமதத்தால் வழியிலேயே உயிரிழக்க நேரிடுகிறது. வெள்ளகெவி மலை கிராமத்துக்கு அரசு சாலை வசதி செய்து தர வேண்டும் என்றனா்.

தேனியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்

தேனியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சாா்பில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற திமுகவின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

தேனி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.தேனி அருகேயுள்ள பத்திரகாளிபுரத்தைச் சோ்ந்த வெள்ளைசுப்பு மகன் ஆனந்தராஜ் (18). இவா் அதே ஊரில் உள்ள தனது தோட்டத்தில் பயிா்களுக்கு தண்... மேலும் பார்க்க

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

உத்தமபாளையம் அருகே குடிநீா் வழங்கக் கோரி, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தேனி மாவட்டம், க.புதுப்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசிக்... மேலும் பார்க்க

காட்டு மாடு தாக்கியதில் வனக் காவலா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வட்டாரம், வருசநாடு அருகே காட்டுமாடு தாக்கியதில் காயமடைந்த சாப்டூா் வனக் காவலா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.தேனி மாவட்டம், வருசநாடு அருகேயுள்ள உப்புத் துறையைச் சோ்ந்தவா் சின்னக்கருப்பன் (4... மேலும் பார்க்க

தேனியில் புத்தகத் திருவிழா தொடக்கம்

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம் சாா்பில் 3-ஆவது புத்தகத் திருவிழாவை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். பழனிசெட்டிபட்டியில் க... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை குறித்த ஆய்வுக்கூட்டம்: பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினா் எதிா்ப்பு

முல்லைப் பெரியாறு அணையின் தேசிய பாதுகாப்பு ஆணைய புதிய கண்காணிப்புக் குழு ஆய்வுக்கூட்டம் திருப்திகரமாக இல்லை என பெரியாறு-வைகை பாசன விவசாய சங்கத்தினா் தெரிவித்தனா்.முல்லைப் பெரியாறு அணையின் தேசிய பாதுகா... மேலும் பார்க்க