செய்திகள் :

ட்ரோன் பிராண்டிங்: விளம்பர உலகில் புதிய சகாப்தம் - தமிழகத்தில் அறிமுகம் செய்த அலோக் இன்ஃபோடெக்

post image

360° கோணத்தில் முழுமையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் தீர்வுகளை வழங்குவதில் முன்னணி நிறுவனமான அலோக் இன்ஃபோடெக், தமிழகத்தின் முதல் ட்ரோன் பிராண்டிங் சேவையை பெருமையுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதுமையான முன்முயற்சியானது ட்ரோன்கள் மூலம் வான்வழி டிஜிட்டல் விளம்பரங்களை அறிமுகப்படுத்துகிறது; இதன் மூலம் பிராண்டுகள் 50 அடி உயரம் வரை நன்கு கண்ணைக் கவரும் காட்சிகள், மோஷன் கிராபிக்ஸ் மற்றும் ஒளிரும் பிராண்டிங் விளம்பரங்களை காட்சிப்படுத்தி தேவையான கவனத்தையும் ஈர்க்கலாம். அதிகபட்ச அளவில் பலரையும் சென்றடையும் விதமாக வடிவமைக்கப்பட்ட ட்ரோன் பிராண்டிங் நிகழ்வுகள், தயாரிப்பு வெளியீடுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பொது சந்திப்பு நிகழ்ச்சிகள் என அதிகளவிலான பார்வையாளர்களை கவர விரும்பும் வணிகங்களுக்கு இந்த புதிய விளம்பர யுக்தி ஒரு சக்திவாய்ந்த அணுகுமுறையாக இருக்கும்.

இது ட்ரோன் பிராண்டிங் விளம்பரத்துறையில் அடுத்த கட்ட வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. இந்த கண்டுபிடிப்பை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், அலோக் இன்ஃபோடெக் நிறுவனம் பல்வேறு பிராண்டுகளுக்கு வழக்கமான விளம்பரப் பலகைகளுக்கு அப்பால் சிந்திக்கவும், பார்வையாளர்களுடன் மிகவும் நெருக்கமாகவும், நன்கு சென்றடையவும், மறக்கமுடியாத வகையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவும் உதவுகிறது.

இந்த அறிமுக நிகழ்வின் ஒரு பகுதியாக, அலோக் இன்ஃபோடெக் நிறுவனம் ட்ரோன் அடிப்படையிலான பிராண்டிங்கை அதிக மக்கள் நடமாடும் பொது இடங்களில் வெற்றிகரமாக நிரூபித்து காட்டியுள்ளது; பார்வையாளர்களின் மிகுந்த ஈடுபாடு மற்றும் ஊடக கவனத்தையும் இந்நிகழ்வு ஈர்த்தது, குறிப்பிடத்தக்கது. இந்த புதிய முயற்சியானது தொழில்நுட்பம், படைப்பாற்றல் மற்றும் அறிவார்ந்த அணுகுமுறையை தடையின்றி ஒன்றிணைத்து – வெளிப்புற விளம்பரத்துறையில் ஒரு புதிய தரநிலையை நிர்ணயித்துள்ளது.

டிஜிட்டல் மார்க்கெட்டிங், LED விளம்பரம், விளம்பர நிகழ்ச்சிகள் மற்றும் புதுமையான பிராண்டிங் தீர்வுகள் ஆகியவற்றின் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமான அலோக் இன்ஃபோடெக் – பிராண்டுகளுக்கு அளவிடக்கூடிய வகையில் விளம்பரங்களை கொண்டு சேர்ப்பதிலும், அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமாகவும் இந்த விளம்பரத் தொழில்துறையில் தொடர்ந்து முன்னோடியாக உள்ளது. இந்த மைல்கல் சாதனையானது தமிழ்நாட்டில் அடுத்த தலைமுறைக்கான புதிய மார்கெட்டிங் தீர்வுகளை முதலில் வழங்கும் அலோக் இன்ஃபோடெக் நிறுவனம் முன்னணிவகிப்பதை மேலும் உறுதிசெய்கிறது.

அலோக் இன்ஃபோடெக் பற்றிய விவரங்கள்:

அலோக் இன்ஃபோடெக் என்பது – டிஜிட்டல் விளம்பரங்கள், வெளிப்புற விளம்பரம், பிராண்டிங் நிகழ்ச்சிகள், மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த புதுமையான மார்கெட்டிங் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட அனைத்து தீர்வுகளையும் வழங்கும் ஒரு முழுமையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் சர்வீஸ் நிறுவனமாகும்.

ட்ரோன் விளம்பரம் மூலம் உங்கள் தயாரிப்புகளை வெளியிட விரும்பினால், கூடுதல் விவரங்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும் - 9789001652

மும்பையின் முதல் பாஜக மேயராகும் ரிது தாவ்டே; சிவசேனாவிற்கு துணை மேயர் பதவி; முடிவுக்கு வந்த இழுபறி

மும்பை மாநகராட்சிக்குக் கடந்த மாதம் தேர்தல் நடந்து முடிந்தது. இத்தேர்தலில் பா.ஜ.க 89 வார்டுகளிலும், சிவசேனா (ஷிண்டே) 29 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இது தவிர உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 65 இடங்களில் வ... மேலும் பார்க்க

மும்பை: ரயில் தண்டவாளத் தடுப்புகளில் கிரீஸ் தடவும் பணி; ரயில்வேயின் திட்டத்தின் பின்னணி என்ன?

மும்பை புறநகர் ரயில்களில் அடிபட்டு தினமும் 10 பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். இந்த உயிரிழப்புகளைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் போதிய பலனளிக்காமல் இருக்கின்றன.ரயில் பயணிகள் அதி... மேலும் பார்க்க

பழுது பார்த்து கொடுக்க மறுப்பு: ரூ.2.50 லட்சத்துக்கு வாங்கிய எலக்ட்ரிக் ஆட்டோவை தீவைத்த பெண்

இப்போது பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால் இது போன்ற எலக்ட்ரிக் வாகனங்களில் பழுது ஏற... மேலும் பார்க்க

"குழந்தை பெற்றுக்கொள்வது பெண்ணின் விருப்பம்" - 30 வாரக் கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

மும்பையைச் சேர்ந்த 17 வயது பெண் தனது ஆண் நண்பருடனான உறவில் கர்ப்பமானார். அவருக்கு இப்போது 18 வயதாகிறது. அவரது வயிற்றில் உள்ள கருவின் வளர்ச்சி 30 வாரமாகிவிட்டது.இக்குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்... மேலும் பார்க்க

அருணாச்சலப் பிரதேசம்: இருசக்கர வாகனத்தில் சென்ற காவலருக்கு நேர்ந்த கொடூரம்; 'புலி' அச்சத்தில் மக்கள்

அருணாச்சலப் பிரதேசத்தில் புலிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு ஆகும். ஆனால் அங்கு காவலர் ஒருவரை புலி ஒன்று தாக்கிக் கொன்றுள்ளது.அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள லோவர் திபாங்க் மாவட்டத்தில் தலைமைக் காவலராகப்... மேலும் பார்க்க

மணமான பெண்ணுக்குத் திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை; 'செல்லாது' - சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

திருமணமான பெண் வழக்கறிஞர் ஒருவர், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்த ஒரு வழக்கில் தனது காதலன் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதா... மேலும் பார்க்க