செய்திகள் :

"தனிநபர் கருத்து கட்சியின் நிலைப்பாடு கிடையாது" - திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்து வேணுகோபால்

post image

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்தச் சூழலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக - காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், சென்னை முகப்பேரில் அகில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

அகில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால்
அகில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால்

அந்தக் கூட்டத்தில், "கூட்டணியில் குழப்பம் ஏற்படும் வகையில் கருத்துக்கள் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். கட்சியின் அறிவுறுத்தலை மீறி பேசினால் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கும்" என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அகில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், " திமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என காத்திருக்கிறோம்.

திமுக-வுடன் சேர்ந்து வகுப்புவாத சக்திகளை எதிர்ப்போம்.

எங்களுக்கும் லட்சியங்கள் உள்ளன. கூட்டணி ஆட்சி குறித்து தெளிவான தீர்க்கமான பேச்சுவார்த்தை தேவை.

கூட்டணி தொடர்பான தனிநபர் கருத்து,காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு கிடையாது.

திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.

அகில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால்
அகில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால்

தொடர்ந்து தவெக உடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "உங்கள் யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது" என்று கூறியிருக்கிறார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி சலசலப்பு; திருமாவளவனின் கருத்து என்ன?!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக-காங்கிரஸ் கூட்டணிகளுக... மேலும் பார்க்க

கோவை: அடுத்தடுத்து 2 பிரமாண்ட மாநாடுகள்; பிளானுடன் களமிறங்கிய செந்தில் பாலாஜி

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளை கைப்பற்ற திமுக, அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. திமுக-வை கரை சேர்க்க செந்தில் பாலாஜியும், அதிமுக-வை வெற்றி பெற வைப்பதற்கு வேலுமணியும் திட்டமிட்டு வருகிறார்... மேலும் பார்க்க

குழம்பிய குட்டையாய் திமுக கூட்டணி; `கை' கொடுக்குமா கமலின் முயற்சி?!

திமுக - காங்கிரஸ் விரிசல்!கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு மேடையிலும் ஆளும் திமுக தரப்பு `எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி... கொள்கை கூட்டணி' என்று பெருமையுடன் பேசிக்கொண்டிருந்தது. அவ்வப்போது கூட்டணிக் கட்... மேலும் பார்க்க

பட்ஜெட் 2026: ``இது விடியா அரசின் கடைசி அத்திப்பழ பட்ஜெட்" - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட்டை, "மக்களை ஏமாற்றும் வெற்று அறிவிப்பு" என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ... மேலும் பார்க்க

மதுரை: மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் பி.எம்.மன்னன் அதிமுக-வில் இணைந்தார்!

மதுரை மாவட்டத்தில் தி.மு.க-வின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஒரு கால கட்டத்தில் கோலோச்சி வந்தார். அவருடன் வலது கரமாக இருந்தவர் தான் பி.எம்.மன்னன். கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்னையால் 2014 ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

`அண்ணன் தம்பிக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை' - மாணிக்கம் தாகூர் 'பளீச்' பதில்

நாடு முழுவதும் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் (Census), சீர்மரபினர் (DNT) சமூகத்தினரைத் தனிப் பிரிவாகக் கணக்கிட வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்... மேலும் பார்க்க