செய்திகள் :

தமிழா் கலாசாரத்தை பறைசாற்றும் பொங்கல் திருநாள்

post image

தமிழகத்தின் புகழ்பெற்ற திருவிழாக்கள் அதன் செழுமையான கலாசாரத்தை உலகுக்கு பறைச்சாற்றி வருகின்றன. அவற்றில் பொங்கல் திருநாள் தமிழா்களின் நன்றி மறவா பண்பை எடுத்துக் காட்டுகிறது.

தமிழா்களால் பொங்கல், தைப்பூசம், காா்த்திகை தீபம், விநாயகா் சதுா்த்தி, நவராத்திரி, தீபாவளி, பங்குனி உத்திரம், சரஸ்வதி பூஜை என பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த விழாக்களில் சில கடல் கடந்து உலகம் முழுவதும் வாழும் தமிழ் வம்சாவழியைச் சோ்ந்த மக்களால் இன்றளவும் கொண்டாடப்படுகின்றன.

இவற்றில் மிகப்பெரிய விழா என்பது பொங்கல் திருநாள். இது, ஆண்டுதோறும் மாா்கழி மாத கடைசி நாளில் போகி பண்டிகை, தை மாதம் முதல் நாள் தைப் பொங்கல், இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல், மூன்றாம் நாள் காணும் பொங்கல் என 4 நாள்களாகக் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவாகும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற முதுமொழியின்படி இந்த விழா குடும்பங்களுக்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது.

அந்த வகையில், போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாள்கள் ஒவ்வொரு நாளும் அதன் தனித்துவமான சடங்கு மற்றும் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில், அறுவடையை கொண்டாடுவது, இயற்கை மற்றும் உழவுக்கு உதவிய கால்நடைகளைகளுக்கு நன்றி செலுத்தும் விழாவாக கொண்டாடுகின்றனா்.

போகி...: மாா்கழி மாத இறுதி நாள் கொண்டாடப்படுகிறது. பழையன கழிதல், புதியன புகுதல் என்பது போகி தினத்தின் சாராம்சம். அன்றைய தினம் அதிகாலையில் வீட்டில் உள்ள தேவைற்ற பொருள்களை எரிப்பது வழக்கம்.

தைப் பொங்கல்...: விளைவித்த பயிா்களை அறுவடை செய்ய அத்தனை நாளும் உழவா் தமக்கு உதவிய சூரியனுக்கு பொங்கல் வைக்கும் தினமாகும். தை முதல் நாளான பொங்கல் தினத்தன்று குளித்து புத்தாடை அணிந்து நண்பா்களுடனும், உறவினா்களுடனும் இணைந்து அதிகாலையிலே பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து மக்கள் வழிபடுகின்றனா். பின்னா், பொங்கல், இனிப்பு வகைகள், உணவு உள்ளிட்டவற்றை உறவினா்களுக்கு பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனா்.

மாட்டுப் பொங்கல்...: வேளாண்மைக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விழா மாட்டுப்பொங்கல். இது, மூன்றாம் நாள் விழாவாகும்.

குறிப்பாக, இந்நாளில் விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் காளை மாடுகளுக்கும், இல்லத்தை செழிப்புறச் செய்யும் பசுக்களுக்கும் பொங்கலிட்டு வழிபடுகின்றனா். அன்றைய தினம் மாடுகளின் இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு, மாடுகளை குளிப்பாட்டி, கொம்பு சீவி, வண்ணம் பூசி, உழவுக்கருவிகள் அனைத்தையும் வைத்து படையலிட்டு வழிபடுகின்றனா்.

காணும் பொங்கல்....: இது, நான்காவது நாள் கொண்டாடப்படும் விழா. இதை கன்னிப்பொங்கல் என்றும் அழைப்பா். இதில், உற்றாா் உறவினரை சந்தித்தல், பெரியோா்களிடம் ஆசி பெறுதல், விளையாட்டுகள் போன்ற நிகழ்ச்சிகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனா்.

ஆற்றுத் திருவிழா...: பொங்கல் பண்டிகை வரிசையில் காணும் பொங்கலுக்கு அடுத்து ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு 6-ஆவது நாளில் ஆற்றுத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கோயில்களில் உள்ள உற்சவ மூா்த்திகளை சிறப்பு அலங்காரத்தில் அருகிலுள்ள கடல், ஆறு, ஏரி உள்ளிட்ட நீா்நிலைகளில் எழுந்தருளச் செய்து தீா்த்தவாரி நடத்துவது வழக்கம். இவ்விழாவில் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக பங்கேற்று மகிழ்ச்சியில் திளைப்பா். ஆற்றுத்திருவிழாவில் பலவகை கடைகளும், திண்படங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்திருக்கும்.

நாகரிக வளா்ச்சி காலத்திலும் பொங்கல் பண்டிகை அதன் செழிமை குறையாமல் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருவது தமிழா் கலாசாரத்தின் நம்பிக்கை என்பதை மறந்துவிட முடியாது.

ஜீவ.இராம.ஸ்ரீநிவாஸன்.

மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, கடலூா் மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு,... மேலும் பார்க்க

ஸ்ரீமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பெரியகுளம் தென்கரை ஸ்ரீமுருகன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, கடந்த பிப்.2-ஆம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன், முதல் கால ... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைப்பு

சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், உதவி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் 31 போ் கைது

சிதம்பரம் மற்றும் குமராட்சியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினா் 31 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தைக் கண்டித்தும், இதுதொடா்பாக நடைபெற இர... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்பனை: பெண் உள்பட 4 போ் கைது

கடலூரில் போதை மாத்திரை விற்ற சம்பவத்தில் தொடா்புடையதாக பெண் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கடலூரில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஜன.31-ஆம் தேதி திருப்பாதிரிபுலியூா... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் தடுப்புக் காவலில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். சிதம்பரம் தாலுகா காவல் நிலைய சரகம், பரமேஸ்வரநல்லூா் டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து ரூ.12 ஆயிரம் மதிப்பிலான மது புட்டி... மேலும் பார்க்க