செய்திகள் :

"தமிழ் சினிமாவில தான் இது சாத்தியம்; வேறு மொழியில் ஓடியிருக்குமான்னு.!" - 'சிறை' பற்றி வெற்றிமாறன்

post image

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியிருந்த படம் 'சிறை'. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் 'சிறை' படத்தின் 75-வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டம் நேற்று (மார்ச். 14) நடைபெற்றிருக்கிறது.

இதில் கலந்துகொண்டு பேசிய வெற்றிமாறன், " இந்தப் படத்திலிருக்கும் உண்மை, அது கடத்த நினைக்கும் உணர்வு எல்லோருக்கும் சென்று சேர்ந்திருக்கிறது என நினைக்கிறேன்.

‘சிறை'
‘சிறை'

இது தமிழின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். அதை சுரேஷ் ஒரு ஸ்க்ரிப்ட்டாக மாற்றி தன்னுடையதாக மாற்றும் பிராசஸ்ஸில் நிறைய சவால்கள் இருந்திருக்கும்.

அதை அவர் எதிர்கொண்டு படத்தை வெற்றியாக கொடுத்திருக்கிறார். இதில் தமிழ் எந்த இடத்திலும் தனக்கான அங்கீகாரத்தை கேட்காதது ஆச்சரியத்துக்கு உரியது.

ஒன்று வெற்றி அடைந்தால், இது என்னடையது என குறிப்பிடும் வழக்கம் இருக்கும். அதை எங்குமே தமிழ் கோரவில்லை. அதே சமயம் சுரேஷ் எந்த இடத்திலும் தமிழை விட்டுக் கொடுக்கவில்லை. அது அவர்களிடம் உள்ள சிறப்பு. 'சிறை' படத்தை தமிழ் மக்கள் பார்த்தவிதம் மிகவும் சிறப்பானது.

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

மற்ற மொழிகளில் 'சிறை' படம் வெளியாகி இருந்தால் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்குமா எனத் தெரியவில்லை. தமிழில் மட்டும்தான் இதுபோன்ற முயற்சிகளைத் தொடர்ந்து செய்கிறார்கள். நல்ல படங்களுக்கான சிறிய முயற்சிகளை மக்கள் அங்கீகரிக்கிறார்கள்" என்று பேசியிருக்கிறார்.

சிறை: "காது கேட்காத தவளையாகவே பயணிக்கிறேன் அப்பா, தாத்தா பெயரை.!"- விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியிருந்த படம் 'சிறை'. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார். '7 Screen Studio' லலித் குமார் தயாரித்திருந்த இந்தப் படத்தில்... மேலும் பார்க்க

'கடைசி வரைக்கும் நன்றியோட இருந்தா மாஸ்'ன்னு சொல்லிருக்கீங்க, நான் என்னைக்குமே!'- தனுஷ் குறித்து கென்

கென் கருணாஸ் 'அசுரன்', 'விடுதலை 2', 'வாத்தி' போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தார். இதனிடையே தனுஷின் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். தற்போது 'யூத்' படத்தை இயக்க... மேலும் பார்க்க

கெணத்த காணோம் விமர்சனம்: 'கிணறு வெட்ட பூதம் கிளம்பிய காமெடி கதை' - சுவாரஸ்யமாக நிரம்புகிறதா படம்?

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கோடங்கிப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் மணிவாசகம் (யோகி பாபு) கோவில் பூசாரியாகவும் சாமி சிலைகளை வடிக்கும் சிற்பியாகவும் இருக்கிறார். நீண்ட நாட்களாக மழை பெய்யாததால் கடும் ... மேலும் பார்க்க

Made in Korea Review: கொரிய கலாசாரத்தை விரும்பும் நாயகியும் பழக்கப்பட்ட தமிழ் சினிமா டெம்ப்ளேட்டும்!

நீலகிரி மாவட்ட கிராமம் ஒன்றில் கொரியா குறித்த பெருங்கனவுகளுடன் வளர்கிறார் செண்பா (பிரியங்கா மோகன்). எப்படியேனும் கொரியாவுக்குச் சென்றுவர வேண்டும் என்ற அவரின் ஆசைக்கு இடையே அதே ஊரில் வசிக்கும் மணிகண்டன... மேலும் பார்க்க

Youth: `சந்தோஷமாக இருக்கு கென், ஆனா அதைவிட அம்மாவுக்கு ரொம்ப பயமா இருக்கு!'- கலங்கிய கிரேஸ் கருணாஸ்

கென் கருணாஸ் இயக்கத்தில் 'யூத்' படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரி- ரிலீஸ் ஈவென்ட் இன்று ( மார்ச். 13) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கிரேஸ் கருணாஸ், "என் பையனுக்கு 'அசுரன்' ப... மேலும் பார்க்க