செய்திகள் :

தருமபுரி: கயிற்றால் இறுக்கி, கல்லைக் கட்டி குட்டையில் வீச்சு; மாமியாரைக் கொன்ற மருமகனோடு ஐவர் கைது

post image

."மாமியாரை காரில் கடத்திச் சென்று, கயிறால் கழுத்தை இறுக்கி கொன்று குவாரி, குட்டையில் போட்டு வந்தவனின் செயலை நினைத்தாலே குலை நடுங்குகிறது" என்கிறார்கள் வெங்கடசமுத்திரம் மக்கள்.

குட்டையில் மிதந்த உடல்
குட்டையில் மிதந்த உடல்

க்ரைம் சினிமாவில் வருவதுபோல், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகிலுள்ள வெங்கடசமுத்திரத்தில், அசோகன் என்பவரின் மனைவி சசிகலா கொலை செய்யப்பட்ட வழக்கில், அவர்களின் மருமகன் அஸ்லாமையும் கூட்டாளிகளையும் போலீஸ் கைது செய்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெங்கடசமுத்திரத்தைச் சேர்ந்த அசோகன்-சசிகலா தம்பதிக்கு 3 மகள்கள் ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த மகள் உமா மகேஸ்வரி, அந்த ஊரில் டிபன் கடை நடத்திவரும் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய தி.மு.க இளைஞரணி அமைப்பாளரான அஸ்லாமைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அஸ்லாம்
அஸ்லாம்

இந்த நிலையில், கடந்த 15 ஆம் தேதி வெளியில் சென்ற சசிகலா வீடு திரும்பாததால், பல இடங்களில் தேடிய கணவர் அசோகன், வீட்டிலிருந்த நகை, பணமும் காணாமல் போயிருப்பதைப் பார்த்து பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சசிகலாவைக் கண்டுபிடிக்க அரூர் டி.எஸ்.பி சதீஷ்குமார் இரண்டு தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டார்.

பிறகு என்ன நடந்தது என்பதை காவல்துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம். "சசிகலா குறித்து பலரிடமும் விசாரித்தபோது சரியான தகவல் கிடைக்கவில்லை. அப்போதுதான் வாணியம்பாடியிலுள்ள குவாரி குட்டையில் ஒரு பெண் உடல் மீட்கப்பட்டதாக அங்குள்ள போலீசார் தகவல் தெரிவிக்க, அது சசிகலாவின் உடல் என்பதை உறுதி செய்தோம்.

அதன் பிறகு உறவினர்களிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது, உமா மகேஸ்வரியின் கணவர் அஸ்லாம் முன்னுக்குப்பின்னாகப் பேச ஆரம்பித்தது மட்டுமின்றி, சம்பவம் நடந்த அன்று காலை அவருடன் சசிகலா காரில் சென்றதைச் சிலர் பார்த்துள்ளனர்.

சசிகலா
சசிகலா

அஸ்லாமுக்கும் மாமியார் சசிகலாவுக்கும் இடையே நகை விஷயத்தில் ஏற்கெனவே பிரச்னை இருந்தது விசாரணையில் தெரிய வந்ததால், தொடர்ந்து அஸ்லாமிடம் விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
 
டிபன் கடை நடத்தி வந்த அஸ்லாம், சூதாட்டத்தில் பணத்தை இழந்து பல லட்சம் கடன் நெருக்கடியில் இருந்திருக்கிறார். வேலைக்குச் சென்றுவரும் மனைவி உமா மகேஸ்வரி, சமீபகாலமாக கணவனின் நடவடிக்கை பிடிக்காமல் சம்பளப் பணத்தை தாயாரிடம் கொடுத்து வைத்தது அஸ்லாமுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமின்றி, சில மாதங்களுக்கு முன் மாமியார் வீட்டிலிருந்து 5 பவுன் நகையை யாருக்கும் தெரியாமல் எடுத்து செலவு செய்தது தெரிந்து சசிகலா, அஸ்லாமிடம் சண்டை போட்டுள்ளார்.

வளையல் வியாபாரம் செய்து வரும் சசிகலாவிடம் நகையும், பணமும் அதிகம் இருப்பதைத் தெரிந்துகொண்ட அஸ்லாம், தன் மனைவிக்குப் போடவேண்டிய நகைகளைப் போடும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
 
இந்நிலையில்தான் கடந்த 15 ஆம் தேதி காலை சசிகலா மட்டும் வீட்டில் இருந்தபோது, வேலைக்குச் சென்ற மாமனார் அசோகன் விபத்தாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று அஸ்லாம் கூறியதை நம்பிய சசிகலா, வீட்டிலிருந்த 10 பவுன் நகை, 15 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு அஸ்லாம் வந்த காரில் ஏறிச் சென்றுள்ளார்.

அந்தக் காரை அஸ்லாமின் நண்பர் ஓட்டியுள்ளார். 3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பூனையானூர் பகுதியில் கார் சென்றபோது அவரிடமிருந்த நகை பணத்தைத் தன்னிடம் கொடுக்குமாறு அஸ்லாம் கேட்க, அப்போதுதான் ஏமாற்றி அழைத்துச் செல்லப்படுகிறோம் என்பதைத் தெரிந்துகொண்ட சசிகலா சண்டை போட்டுள்ளார்.

நவீன் - பூபால்
நவீன் - பூபால்

அப்போது முன் சீட்டிலிருந்த சசிகலாவைத் தாக்கி கழுத்தில் நைலான் கயிற்றைச் சுற்றி இறுக்கித் துடிதுடிக்க கொலை செய்துள்ளார். பின்பு உடலை ஒரு சாக்குப் பையில் போட்டு டிஸ்போஸ் செய்ய ஒவ்வொரு இடமாக அலைந்து எதுவும் அமையாததால், பூனையானூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியிலேயே பகல் முழுவதும் காரை நிறுத்தி வைத்திருந்துள்ளனர்.

காரில் பிணத்தை வைத்து அலைந்தால் போலீஸ் சோதனையில் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்து தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரான நண்பர் பூபாலை வரவழைத்து, அன்று இரவு வாணியம்பாடிக்கு உடலைக் கொண்டு சென்று அங்கு செயல்படாத குவாரிக் குட்டையில் கல்லைக்கட்டி போட்டுள்ளனர். அதற்கு முன் சசிகலா அணிந்திருந்த தாலி, கம்மல் உள்ளிட்ட 23 கிராம் நகைகளை எடுத்துக் கொண்டுள்ளார்.

வளையல் வியாபாரம் செய்யப்போன சசிகலா காணாமல் போய்விட்டார் என்று குடும்பத்தினர் நினைத்துக் கொண்டு சில நாளில் மறந்துவிடுவார்கள் எனத் திட்டமிட்டிருக்கிறான் அஸ்லாம். ஆனால், சசிகலாவிடமிருந்து கைப்பற்றிய மொபைல் போனை அஸ்லாம் மறைத்து வைத்திருந்ததும், காரில் சென்றது சி.சி.டி.வி-யில் பதிவானதும்தான் அவரைக் காட்டிக் கொடுத்தது. நகைக்காக மனைவியின் தாயாரைத் திட்டமிட்டு கொடூரமாகக் கொலை செய்ய எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை" என்றனர்.
 
வெங்கடசமுத்திரத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, "ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த அஸ்லாம் தி.மு.க-வில்  பொறுப்பில் இருந்ததால் எல்லோருக்கும் தெரிந்தவனாக இருந்தான். காதல் திருமணம் செய்துகொண்டு நன்றாகத்தான் வாழ்ந்தார்கள். சமீபகாலமாக அவன் நடவடிக்கை சரியில்லை; கடன் பிரச்னக்காக இப்படிக் கொலை செய்யலாமா?" என்றனர்.

"நகைக்காக மட்டும் இக்கொலை நடந்ததா? வேறு ஏதும் காரணம் உள்ளதா?" என்று அரூர் டி.எஸ்.பி சதீஷகுமாரிடம் கேட்டோம். "நகைக்காகத்தான் இந்தக் கொலை நடந்துள்ளது. அஸ்லாமுக்குப் பணத்தேவை அதிகம் இருந்துள்ளது. இதனால் சசிகலாவைக் கொலை செய்து நகைகளை எடுத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கிறான். சி.சி.டி.வி பதிவுகள், மொபைல் போன் சிக்னல் அந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. எங்கள் விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்" என்றார்.

அஸ்லாம், அவனின் நண்பர்கள் பூபால், நவீன், ஜாகிர், சமியுல்லா ஆகியோரைக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: குற்றஞ்சாட்டும் தவெக; சவால்விடும் திமுக; காத்திருக்கும் நீதி

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 2018, மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில், 2 பெண்கள் உட்பட 13 பேர் போலீஸாரால் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர... மேலும் பார்க்க

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்க... மேலும் பார்க்க

ஈரோடு: 3.50 ஏக்கர் நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம்; சப்-ரிஜிஸ்டர், பத்திர எழுத்தர் கைது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராயர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சப்-ரிஜிஸ்டர் சங்கரை அணுகியுள்ளார். 3.50 ஏக்கர்... மேலும் பார்க்க

சென்னை: 'ஆபாச செய்கை, போட்டோ மார்பிங்' - GST பெண் ஆபீஸருக்கு செக்ஸ் டார்ச்சர்; சக அதிகாரி கைது

சென்னை முகப்பேரில் ஜி.எஸ்.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் என்பவரும் அத... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் கொலை: 'கந்துவட்டி பிரச்னை; விநாயகர் சிலை' - சென்னை துணை நடிகர் கொலையின் பின்னணி என்ன?

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராணி. இவரின் மகன் பிரதீப்ராஜ் (34). இவர் துணை நடிகராகவும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் சில தினங்... மேலும் பார்க்க