சேலம்: 5 லட்சம் விரல் ரேகைகளில் டாக்டர் அம்பேத்கர் உருவம்; அரசு பொறியியல் கல்லூர...
தவெக: “எங்களோடு கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள் என கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்” - செங்கோட்டையன்
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில், சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது.

தேர்தல் ஆணையம் தவெகவிற்கு இன்று விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது.
இந்நிலையில் இன்று பனையூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய செங்கோட்டையன், "எல்லோரும் இன்று தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.
ஒருபுறம் 10 கட்சி கூட்டணி. மற்றொரு புறம் 8 கட்சி கூட்டணி. ஆனால் யாரை எல்லோரும் தேடித்தேடி வருகிறார்கள் என்று சொன்னால் தவெக விஜய்யைத் தான்.
எங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்.
விஜய்க்கு தானாகவே கூட்டணி அமையும். அப்படி கூட்டணி அமைந்தால் 234 தொகுதிகளிலும் தவெகதான் வெல்லும்.
விஜய் யாரை நிற்க வைக்கிறாரோ அவர்கள் தான் வெல்வார்கள். தவெகவை தவிர யாராலும் தமிழகத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற வரலாற்றைப் படைப்போம்.
அந்தக் காலத்திற்காகத் தான் எல்லோரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்" என்று பேசியிருக்கிறார்.












