செய்திகள் :

’தவெக பெரும்பான்மை பெற மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா?’ – செங்கோட்டையன் பதில்

post image

கோவை விமான நிலையத்தில் த.வெ.க. உயர்மட்ட நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நேற்றிரவு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “தவெக தலைவர் விஜய்க்குக் கிடைத்திருக்கும் வெற்றிக்கு, மக்கள் வைத்திருக்கும் அன்பும், ஆதரவும்தான் காரணம். ஒரு இயக்கம் வளர வேண்டும் என்றால், தியாகம் செய்ய வேண்டும். தியாகத்தின் அடிப்படையில்தான் ஒரு இயக்கம் இருக்கும்.

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தியாகத்தால் வளர்த்த இயக்கம், தற்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது. எங்களைப் பொருத்தவரை தான் என்று ஒருவன் நினைத்தால், தெய்வம் தான் என்று காட்டிவிடும். தெய்வத்தால் ஆகாது என ஒன்றும் இல்லை. தெய்வத்தால் விஜய் ஆட்சி கட்டிலில் அமர இருக்கிறார். இது மக்கள் சக்தியாக மாறியிருக்கிறது.

இந்தியாவில் முதல் முறையாக ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் முதல் தேர்தலில் மாபெரும் வெற்றி என்பது சரித்திர வரலாறாக மாறியிருக்கிறது. மக்கள் வாழ்த்துகிறார்கள். மக்கள் நேசிக்கிறார்கள், உயிர் என நேசிக்கும் மக்களுக்கு என்றும் அவர் உறுதுணையாக இருப்பார்.

விஜயின் எண்ணங்கள், தொலைநோக்கு பார்வை, மனிதநேயம் அனைத்தும் இருப்பதால் ஆட்சி சிறப்பாக இருக்கும்” என்றார்.

த.வெ.க பெரும்பான்மை பெற மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா என்ற கேள்விக்கு, ”நாளை அனைத்தையும் பார்க்கலாம்” எனப் பதிலளித்தார்.

அவிநாசி: இ-சேவை மையம் நடத்தும் கணவர்; எல்.முருகனை வீழ்த்தி வாகை சூடிய இல்லத்தரசி! யார் இந்த கமலி?

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலா மணி, அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ... மேலும் பார்க்க

ஈரோட்டில் வாஷ் அவுட்டான திமுக கூட்டணி; அமைச்சர் உட்பட 8 பேரை வீழ்த்திய த.வெ.க!

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிப்பாளையம், மொடக்குறிச்சி, பவானி, பவானிசாகர் தனி, அந்தியூர், பெருந்துறை என மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஈரோடு மேற்கு, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்ப... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம்: சோபிக்காத த.மா.கா; சம்பவம் செய்த சக்கரபாணி - 7வது முறை வெற்றி சாத்தியமானது எப்படி?

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார், சக்கரபாணி. தொகுதி முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் என எல்லாவற்றையும் செய்து தொகுதியைத் தன் கன்ட்ரோலி... மேலும் பார்க்க

ஓ.பி.எஸ்ஸிற்கு ’கிலி’யை ஏற்படுத்திய த.வெ.க; திக் திக் வாக்கு எண்ணிக்கை; போராடி கரை சேர்ந்த தி.மு.க!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க -வில் இணைந்து போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார் எனும்போது வெல்வாரா? தோற்பாரா? என்ற எதிர்பார்ப்புகள் எகிறியது. அ.தி.மு.க-வால் இவ்வளவு காலமும் வெற... மேலும் பார்க்க

TVK: சீட் தராத திமுக; பழி தீர்த்த கட்சித்தாவல்; சூலூரை வென்ற தவெக சுகுமாரின் பின்னணி என்ன?

சூலூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 616 வாக்காளர்கள் உள்ள நிலையில்,2 லட்சத்து 71 ஆயிரத்து 567 பேர் வாக்களித்தனர். இதில் 90 ஆயிரத்து 531 வாக்குகள் பெற்ற த.வெ.க. வேட்பாளர் சுகுமார... மேலும் பார்க்க

TVK: 'சென்னைவாசி, சிபி சத்யராஜின் ஆதரவு' - சிங்காநல்லூரை வென்ற ஸ்ரீ கிரி பிரசாத்தின் பின்னணி என்ன?

சிங்காநல்லூர் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 69 ஆயிரத்து 941 வாக்காளர்களில், தேர்தலில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 746 பேர் வாக்களித்தனர். இதில் த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீ கிரி பிரசாத் 84 ஆயிரத்து 163 வாக்... மேலும் பார்க்க