செய்திகள் :

தவெக-வுடன் கூட்டணிக்கு தயாராகும் என்.ஆர்.காங்கிரஸ்? - ரங்கசாமியின் `கிரீன்’ சிக்னலால் தவிக்கும் பாஜக

post image

`கோதாவரி கோட்டைக் கிழி...’

புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற பா.ஜ.க, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையிலும் பங்கெடுத்தது.

அடுத்து வந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை பா.ஜ.க-வுடன் இணக்கமாக இருந்த முதல்வர் ரங்கசாமி, அதன்பிறகு `கோதாவரி கோட்டைக் கிழி… நீங்க நல்லா இருக்கீங்களா, நாங்களும் நல்லா இருக்கோம்…' என்ற ரீதியில் இடைவெளியை கடைப்பிடிக்க ஆரம்பித்தார்.

அதற்குக் காரணம் ஆளுநர் மூலம் `செக்' வைக்கும் பா.ஜ.க ஃபார்முலா. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த உடனேயே முதல்வர் ரங்கசாமியிடம் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்க முயற்சித்தது பா.ஜ.க. ஆனால் அதற்கு சிறிதும் பிடி கொடுக்காமல் பா.ஜ.க தரப்பை இழுத்தடித்து வந்தார் ரங்கசாமி.

ரங்கசாமி, மோடி

எப்படியாவது கூட்டணியை இறுதி செய்துவிட வேண்டும் என்று கடந்த ஆண்டு இறுதியில் புதுச்சேரிக்கு படையெடுத்த மத்திய அமைச்சர்களை, `கோதாவரி' பாணியிலேயே டீல் செய்தார் முதல்வர் ரங்கசாமி.

அதன்பிறகு கடந்த பிப்ரவரி மாதம் காரைக்கால் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த முதல்வர் ரங்கசாமி அங்கிருந்த செய்தியாளர்களிடம், `தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்கிறோம்' என்று கூறிவிட்டுச் சென்றார்.

அதையடுத்து புதுச்சேரியில் நடைபெற்ற  என்.டி.ஏ கூட்டணி ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க-வின் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, `எங்கள் கூட்டணியில் முக்கியமான கட்சி என்.ஆர்.காங்கிரஸ்தான். அதேசமயம்,  இன்னும் சில கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.

`ரங்கசாமிக்கு என்ன பிரச்னை ?’

அந்த வகையில் லட்சிய ஜனநாயகக் கட்சி எங்கள் கூட்டணிக்குள் வருகிறது. அவர்கள் கூட்டணிக்கு வருவதற்கு முதல்வர் ரங்கசாமி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளுடன் பா.ஜ.க 14 தொகுதிகளிலும் போட்டியிடும்" என்று கூறியிருந்தார்.

ஆனால் பா.ஜ.க-வின் இந்தக் கருத்தை என்.ஆர்.காங்கிரஸ் உறுதிப்படுத்தவில்லை. குறிப்பாக, தேர்தலுக்கு முன்பே மாநில அந்தஸ்து குறித்த அறிவிப்பு இருக்க வேண்டும். அத்துடன் `லாட்டரி' ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூட்டணிக்குள் வருவதில் எனக்கு விருப்பமில்லை' என்று பா.ஜ.க தரப்பில் அழுத்தமாக தெரிவித்திருந்தார் முதல்வர் ரங்கசாமி. ஆனால், `எங்களுக்கான 14 தொகுதிகளில்தான் ல.ஜ.க-வுக்கு ஒதுக்கப் போகிறோம்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் விஜய்

அதில் உங்களுக்கு என்ன பிரச்னை?' என்ற ரீதியில் கேள்வி எழுப்பிய பா.ஜ.க, மாநில அந்தஸ்து குறித்த பேச்சை கவனமாக தவிர்த்தது. இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் இரவு ஏனாமில் இருந்து திரும்பிய முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏ.கே.டி ஆறுமுகம், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலாளர் என்.எஸ்.ஜே ஜெயபால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்தார்.

அப்போது, `மாநில அந்தஸ்து பற்றி அவர்கள் எதையும் பேச மறுக்கிறார்கள். ல.ஜ.க கூட்டணிக்குள் வருவதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அவர்களாகவே கூறுகிறார்கள். இவர்கள் சொன்னதை நம்பி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம் என்று கடந்த தேர்தலில் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தோம்.

`என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ரங்கசாமி வெளியேறினால்...’

அடுத்த தேர்தலே வந்துவிட்டது. மக்களை நாம் எப்படி எதிர்கொள்வது ? அவர்களுக்கு `லாட்டரி' மார்ட்டின் குரூப் முக்கியம் என்றால் நாம் தனித்துப் போட்டியிடுவோம்' என்று புலம்பித் தீர்த்திருக்கிறார்.

அதையடுத்து இரவோடு இரவாக தனியார் விடுதியில் காத்திருந்த பா.ஜ.க-வினரை சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள், முதல்வரின் கருத்தைக் கூறினார்கள்.

ஆனால், `லட்சிய ஜனநாயகக் கட்சி எங்கள் கூட்டணியில்தான் இருக்கும்' என்று ஆவேசமாகக் கூறியது பா.ஜ.க தரப்பு. அதனால் கூட்டணிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை முடியாததால் இரண்டு தரப்பும் ஏக டென்ஷனில் இருக்கின்றன.

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக ஆலோசனை கூட்டத்தில் ரங்கசாமி

இந்த நிலையில், `பா.ஜ.க-வுடனான கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன ? கூட்டணியில் தொடர்கிறீர்களா ?' என்ற கேள்வியுடன் என்.ஆர்.காங்கிரஸின் பொதுச் செயலாளர் என்.எஸ்.ஜே ஜெயபாலிடம் பேசினோம். அதற்கு, `தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் ல.ஜ.க வருவதை என்.ஆர்.காங்கிரஸ் விரும்பவில்லை.

பா.ஜ.க அந்த விவகாரத்தில் உறுதியாக இருந்தால், எங்கள் தலைவருடன் ஆலோசனை செய்து அடுத்தக்கட்டம் குறித்து முடிவெடுப்போம்' என்றார். தொடர்ந்து, `த.வெ.க-வுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா ?' என்று நாம் எழுப்பிய கேள்விக்கு, `அதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன' என்று முடித்துக் கொண்டார். இதுகுறித்துப் பேச பா.ஜ.க மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கத்தை தொடர்பு கொண்டோம். ஆனால், `அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக' கூறியது அவரது செல்போன்.

என்.ஆர்.காங்கிரஸுடனான மோதலால், `என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ரங்கசாமி வெளியேறினார் என்றால் நாங்கள் போட்டியிடவே மாட்டோம்' என்று பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகிகள் சிலரே வெளிப்படையாக கூறியிருக்கின்றனர். அதையடுத்து ரங்கசாமியை சமாதானப்படுத்த முயற்சி செய்து வருகிறது பா.ஜ.க தரப்பு.

முடிவுக்கு வரும் இழுபறி? ஒப்பந்தமாகும் திமுக - விசிக கூட்டணி.! எத்தனை தொகுதிகள்?

திமுக விசிக கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்த நிலையில் பேசுவார்த்தையில் ஒரு முடிவு எட்டப்பபட்டிருப்பதாக கூறப்படுகிறது. விசிகவுக்கும் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என விசாரித்தோம். திரும... மேலும் பார்க்க

'1 மணி நேரத்தில் 51 விருப்ப மனுக்கள் மட்டுமே விநியோகம்;ஆர்வம் காட்டாத நிர்வாகிகள்! - அப்செட் சசிகலா?

அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்பமனு விநியோகத்தை தொடங்கியிருக்கிறார் சசிகலா. நிர்வாகிகள் மத்தியில் விருப்ப மனு வாங... மேலும் பார்க்க

நெல்லை: காருக்குள் தாயை கட்டியணைத்தபடி கருகிக்கிடந்த குழந்தைகள்; 4 பேர் உயிரிழப்பின் பகீர் பின்னணி!

குடும்பத்துடன் உயிரிழப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்பு ஆற்றங்கரை பள்ளிவாசல் பகுதியில் உள்ளவர்களுக்கு உணவு அளித்துள்ளனர். அத்துடன், ஏழைகள் மாற்றுத் திறனாளிகளுக்காக புத்தாடை வாங்கி வந்து கொடுத்து மகிழ்ந... மேலும் பார்க்க

வட கொரியா தேர்தலில் Kim Jong Un வெற்றி; ஆனால், மக்கள் கொடுத்த 'அதிசய' ட்விஸ்ட் - அது என்ன?

ஒவ்வொரு நாட்டு அரசியலிலும் தேர்தல் மிக மிக முக்கியம். உலக நாடுகளில் இருந்து சற்று மாறுபட்ட 'ஸ்டைலில்' வட கொரியாவில் ஆட்சி இருந்தாலும்... நடந்தாலும், அங்கேயும் கட்டாயமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்... மேலும் பார்க்க

ஹார்முஸில் 5,000 பவுண்ட் வெடிகுண்டு: யாரும் உதவிக்கு வரவில்லை; 'தானே' களத்தில் இறங்கிய அமெரிக்கா

அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்களுக்கு எதிராக தொடுத்துள்ள போருக்கு ஈரானின் முக்கிய எதிர்வினை 'ஹார்முஸ் ஜலசந்தி' மூடல். இந்த ஜலசந்தி மூடலால் உலகளவில் பல வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை சரிசெய்ய அமெரி... மேலும் பார்க்க

``திமுக-வினர் வேண்டுகோள் விடுத்தார்களே தவிர கட்டளையிடவில்லை.!' - இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன்

நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இந்திய கம்யூனிஸ்ட்- திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்தவகையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறத... மேலும் பார்க்க