செய்திகள் :

தாராபுரம்: பிரசாரத்தில் தாக்கப்பட்டாரா அமைச்சர் சம்பத் குமார்? உள்ளுர் மக்கள் சொல்வது என்ன?

post image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற‌த் தொகுதிக்குக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் நடைபெற இருக்கிறது. ராஜினாமா எம்.எல்.ஏ- வான சத்தியபாமா தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார்.

தாராபுரம் தொகுதியில் அவருக்கு எதிராகப் பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இந்த நிலையில், சத்யபாமாவை ஆதரித்து நஞ்சியம்பாளையத்தில் த.வெ.க அமைச்சர் வி. சம்பத் குமார் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அந்தப் பகுதிக்குச் சென்ற அ.தி.மு.க-வினர், வேட்பாளர் சத்யபாமாவுக்கு எதிராகச் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்து, ஆளுங்கட்சியிடம் இருந்து ₹50 கோடியைப் பெற்றுக் கொண்டு ராஜினாமா செய்ததாகக் கூறி, அ.தி.மு.க- வினர் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

த.வெ.க மற்றும் அ.தி.மு.க இடையே ஏற்பட்ட இந்த வாக்குவாதம் கடுமையான தள்ளுமுள்ளாக மாறி மோதலில் முடிந்திருக்கிறது.

வாக்குவாதம்
வாக்குவாதம்

இந்தச் சம்பவத்தில் இருவருக்கு காயம் ஏற்பட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை முன்பு 300-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க- வினர் திரண்டதால் தாராபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இது குறித்து தெரிவித்த நஞ்சியம்பாளையம் மக்கள், "நேற்றிரவு அமைச்சர் சம்பத் குமார் பிரசாரத்தில் ஈடுபட்டுபோது. அ.தி.மு.க- வைச் சேர்ந்த சிலர் கேள்விகளை எழுப்பினார்கள். அமைச்சர் முன்னிலையில் இரண்டு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இரண்டு தர்ப்பைச் சேர்ந்த இருவருக்கு காயம் ஏற்பட்டது. அமைச்சர் நேரடியாகத் தாக்கப்படவில்லை. ஆனால், அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது உண்மைதான். பாதுகாப்பாக அவரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தோம். போலீஸ் அதிகாரிகளிடமும் இதைச் சொல்லியிருக்கிறோம்" என்றனர்.

தாராபுரம்: "அதிமுக-திமுக கூட்டு சேர்ந்து எங்களுக்கு எதிராகச் சதி செய்கிறார்கள்" - தவெக சத்தியபாமா

தாராபுரம் தொகுதி த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவிற்கு எதிராக தொகுதியில் நாளுக்கு நாள் பிரச்னை அதிகரித்து வருகிறது. காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்கு சேகரிக்க சென்றாலும் அவருக்கு எதிரான நடவடிக்கைகளில் ம... மேலும் பார்க்க

"எடப்பாடியுடன் கூட்டணி வைத்தால் துணை முதல்வர் பதவி என்றார் ஆதவ் அர்ஜுனா" - ரகசியம் பகிர்ந்த சீமான்

தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களத்தில் உள்ள கார்த்திகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு தொண்டர்கள்... மேலும் பார்க்க

தாராபுரம்: `விருப்பப்பட்டவர்கள் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்..!' - ஆவேசமான நிர்வாகிகள்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6- ம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். த.வெ.க சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சத்... மேலும் பார்க்க

தாராபுரம்: திமுக நிர்வாகிகள் வீட்டில் ரூ.48 லட்சம் பறிமுதல்| தீவிர விசாரணையில் தேர்தல் பறக்கும் படை!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் அக்டோபர்- 6- ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தி.மு.க தரப்பு வேட்பாளராக வழக்கறிஞர் சுகன்யா களத்தில் ... மேலும் பார்க்க

தாராபுரம்: தவெக வேட்பாளருக்கு வலுக்கும் எதிர்ப்பு; போலீஸார் பாதுகாப்புடன் நடைபெறும் பிரசாரம்!

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 - ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. தாராபுரம் ... மேலும் பார்க்க

"இடைத்தேர்தலைத் திணிப்பவர்களே தேர்தல் செலவையும் ஏற்க வேண்டும்" - தாராபுரத்தில் சீமான் ஆவேசம்

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6 - ம் தேதியும் வாக்கு எண்ணிக்கை 9-ம் தேதியும் நடைபெற இருக்கின்றன. தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன... மேலும் பார்க்க