செய்திகள் :

தாறுமாறாக ஓடிய கார் - கோவை அவிநாசி சாலையை அலறவிட்ட போதை ஆசாமி

post image

கோவை அவிநாசி சாலை பீளமேடு அருகே நேற்று இரவு நேரம் சொகுசு கார் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. தாறுமாறாக கட்டுப்பாடு இல்லாமல் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியது. மக்கள் எச்சரித்தும் கேட்காமல் அந்த கார் அச்சுறுத்தும் வகையில் வேகமாக சென்றது.

கோவை அவிநாசி சாலை பிரச்னை

இதனால் மக்கள் கோபமாகி அந்த காரின் கண்ணாடிகளை உடைத்து நிறுத்தினார்கள். பிறகு காரை சூழ்ந்த மக்கள் ஓட்டுநரை இறங்குமாறு கூறினார்கள்.

காருக்குள் இருந்த இளைஞர் வேட்டி மற்றும் பனியன் அணிந்திருந்தார். போதையில் இருந்த அவர் கீழே இறங்காமல், காரின் மீது ஏறி நின்றார். பிறகு சிகரெட் பிடித்தபடி அங்கிருந்த மக்களிடம் பிரச்னை செய்தார்.

கோவை அவிநாசி சாலை பிரச்னை

தன் இருப்பிடத்தை பற்றி தெளிவாக சொல்லாமல், ‘நான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் உள்ளேன்’ என்று கூறி மக்களை மிரட்டியுள்ளார். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு காவல்துறையினர், அந்த இளைஞரை பிடித்து கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தனர். 

கோவை
கோவை

விசாரணையில் அவர் சேலத்தைச் சேர்ந்த ஆண்டனி என்று தெரியவந்துள்ளது. மன அழுத்தம் பிரச்னைக்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். அவரின் காரை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சபரிமலை கோயில் தங்கம் கொள்ளை வழக்கு: தேவஸ்தான தந்திரி கண்டரரு ராஜீவர் கைது! - என்ன நடந்தது?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலகர்கள் சிற்பம், திருநடை ஆகியவற்றில் பொதிந்த தங்கத்தகடுகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை கேரளா கோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக... மேலும் பார்க்க

சென்னை: நகைக்காகக் பெண் கொலை - இளைஞர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை, அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (55). இவரின் மனைவி அமுதா (53). கடந்த 8-ம் தேதி மாலை சீனிவாசனின் வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. அதோடு வீட்டுக்குள் இருந்து புகையும... மேலும் பார்க்க

திண்டுக்கல்: ஜாமீனில் வந்த 21 நாள்களில் கணவன் - மனைவி வெட்டி படுகொலை; பின்னனி என்ன?

திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 41). மீன் வியாபாரி. இவர் நேற்று கொசவபட்டியில் புதிதாக மீன் கடை வைப்பதற்காக இடம் பார்த்துவிட்டு அவரது மோட்டார் சைக்கிளில் நத்தத்திலிருந்து திண்டு... மேலும் பார்க்க

சேலத்தில் மருத்துவ மாணவி கொலை; காதல் விவகாரமா? தந்தையைத் தேடும் போலீஸ்! - நடந்தது என்ன?

சேலத்தை அடுத்த சித்தர்கோயில் அருகில் தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பாரதி நகரைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகள் வர்ஷின... மேலும் பார்க்க

சேலம்: பட்டா பெயர் மாற்றத்திக்கு லஞ்சம்; ஓய்வுபெற இருந்த வருவாய் ஆய்வாளர் கைது; நடந்தது என்ன?

சேலம் மாவட்டம், ஆத்தூர் மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது தாய் பச்சியம்மாள் பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனு... மேலும் பார்க்க

`திறமையை சோதிக்க வேண்டுமென அழைத்தார்' - 17 வயது வீராங்கனையை வன்கொடுமை செய்த பயிற்சியாளர்

டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில், 17 வயது வீராங்கனை கலந்து கொண்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார். அந்த வீராங்கனைக்கு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுவதில் த... மேலும் பார்க்க