செய்திகள் :

திண்டிவனம்: பேருந்து நிலையத்துக்கு வைக்கப்பட்ட கலைஞர் பெயர் நீக்கம் - அதிரடி அரசாணையின் பின்னணி!

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கடந்த 55 ஆண்டுக்காலமாகச் செயல்பட்டு வந்த இந்திரா காந்தி பேருந்து நிலையம், இட நெருக்கடி காரணமாகவும், கட்டடங்கள் பழுதடைந்த காரணத்தாலும் இடிக்கப்பட்டது.

அதையடுத்து தீர்த்தங்குளம் பகுதியில் ரூ.27 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. அந்தப் புதிய பேருந்து நிலையத்திற்கு `முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையம்' என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது.

பிப்ரவரி 5-ம் தேதி காணொளி வாயிலாக அந்தப் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெயர் மாற்றப்பட்ட பேருந்து நிலையம்

அதையடுத்து, `இந்திரா காந்தி பேருந்து நிலையம் என்ற பழைய பெயரையே வைக்க வேண்டும்' என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அதே கோரிக்கையை வலியுறுத்தி விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் மனு அளித்தனர்.

தொடர்ந்து வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினிடம், இந்திரா காந்தி பேருந்து நிலையம் என்ற பெயரே தொடர வேண்டும் என மனு கொடுத்து வலியுறுத்தினர்.

பிப்ரவரி 4-ம் தேதி திண்டிவனத்தில் நடைபெற இருக்கும் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த நிலையில்தான் நேற்று இரவு புதிய பேருந்து நிலையத்திற்கு வைக்கப்பட்டிருந்த கலைஞரின் பெயர் நீக்கப்பட்டு, இந்திரா காந்தி பெயரே தொடர வேண்டும் என அரசாணை வெளியானது.

ஆனால் அந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் தி.மு.கவினர், நேற்று இரவு புதிய பேருந்து நிலையத்தின் முன்பு குவிந்தனர். அதேபோல திண்டிவனம் நகராட்சியின் தி.மு.க நகரமன்ற உறுப்பினர்கள் பேருந்து நிலையத்தின் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

ஸ்டாலின், செல்வப்பெருந்தகை
ஸ்டாலின், செல்வப்பெருந்தகை

அதையடுத்து அங்கு வந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார் செல்வப்பெருந்தகை.

அந்தப் பதிவில், `திண்டிவனத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களின் பெயரில் பல ஆண்டுகளாக பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. அதற்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் என்று பெயர் வைப்பதாக அறிவிப்பு வந்தது.

அதையடுத்து இந்திராகாந்தி அவர்களின் பெயரிலேயே பேருந்து நிலையம் தொடர வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தேன். அதை ஏற்றுக்கொண்டு பெயரை மாற்றியிருக்கும் முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Yumnam Khemchand: மணிப்பூரின் புது முதலமைச்சர்? மெய்தி, குக்கியை பேலன்ஸ் செய்யும் பாஜக - எப்படி?

2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் குக்கி இன மக்களுக்கும், மெய்தி இன மக்களுக்கும் கலவரம் தொடங்கியது. கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் என அந்தப் பகுதியில் பல்வேறு கொடூரங்கள் நடந்தேறிக்கொண்டே இருந்தன. இந்த... மேலும் பார்க்க

இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'மகுடத்தில் ரத்தினக் கல்'- பியூஷ் கோயல் என்ன சொல்கிறார்? Quick Points

இந்தியா மீதான வரியை 25 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்திய நேரப்படி, நேற்று இரவு, இந்திய பிரதமர் மோடி மற்றும் ட்ரம்ப் தொலைபேசியில் பேசிக்கொண்டனர். அந... மேலும் பார்க்க

'இந்தியா ஒரு காலனி அல்ல'- அமெரிக்காவுடனான வரி ஒப்பந்தம் குறித்து ஜோதிமணி விமர்சனம்

அமெரிக்காவும், இந்தியாவும் ஒரு பெரிய ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். அதன்படி இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% இருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. ... மேலும் பார்க்க

ராகுல் பற்றவைத்த சீன நெருப்பு; நள்ளிரவில் நடந்த உரையாடல்? - நரவானே புத்தகமும், அரசியல் பூகம்பமும்!

நாடாளுமன்ற மக்களவையில் இரண்டாவது நாளாக `அமளி அனல்' தகித்துக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்றைய தினம் கையிலெடுத்த `சீன ஊடுருவல்' விவகாரம்தான். ‘Four S... மேலும் பார்க்க

"மோடி ஜி பயப்படுகிறார்; எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும்.!"- ராகுல் காந்தி விமர்சனம்

மக்களவையில் ராகுல் காந்தி நேற்று (பிப்.2) முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதி வெளி வராத `Four Stars Of Destiny' புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது குறித்து பிரபல பத்திரிகை வெளியிட்ட செய்திக்கட்டுரையின் அடிப... மேலும் பார்க்க