செய்திகள் :

திண்டுக்கல்: குடிநீர் தட்டுப்பாடு; காலி குடங்களுடன் சாலை மறியலில் இறங்கிய பெண்கள்!

post image

திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 41 மற்றும் 42-வது வார்டுகளில் வாட்டர் டேங்க் ரோடு மற்றும் மேட்டுப்பட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறு விநியோகிக்கப்படும் குடிநீரும் வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே வழங்கப்படுவதால், அன்றாடத் தேவைகளுக்குக்கூட தண்ணீர் இன்றி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள், மாநகராட்சி அதிகாரிகளிடமும், சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினர்களிடமும் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. எனவே, மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், குடிநீர் உடனடியாக வழங்கக் கோரியும் 30-க்கும் மேற்பட்ட பெண்கள், இன்று (09.07.2026) திண்டுக்கல் - மதுரை சாலையில் காலி குடங்களுடன் திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலி குடங்கள்

இந்த போராட்டத்தால் திண்டுக்கல் - மதுரை சாலையில் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இது குறித்துத் தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இப்பகுதிக்கு உடனடியாக லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும், சீரான குடிநீர் விநியோகத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸார் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.  இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

`கல்விக்கூடங்கள் அரசியல் மேடையோ புகழ் பரப்பும் இடமோ அல்ல; இனி யாருக்கும்..!' - அமைச்சர் ராஜ்மோகன்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது, வகுப்பறைக்குச் சென்... மேலும் பார்க்க

``திருமாவளவன்: பாலுக்கும் காவல் - பூனைக்கும் காவல் என்கிறார்" - நயினார் நாகேந்திரன்

பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது வரவேற்கத்தக்கது. ஆனால், கரூர் சம்... மேலும் பார்க்க

கரூர்: `தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா தவெக அரசு?'- சிபிஎம் சண்முகம்

நாளை (ஜூலை 10) கரூர் செல்லும் முதல்வர் விஜய், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 நபர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்நிலை... மேலும் பார்க்க

`மாணவர்கள் பற்றாக்குறை' - 3 அரசு பள்ளிகள் மூடல்... உசிலம்பட்டியில் அதிர்ச்சி!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதி பெரும்பாலும் விவசாயம் சார்ந்த மிகவும் பின் தங்கிய பகுதியாக உள்ளது. இந்தப் பகுதி மக்களின் கல்வியை மேம்படுத்த ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்திலேயே ‘கள்ளர் சீரமைப்புத்துறை’ என... மேலும் பார்க்க

விடைபெறுகிறார் ஈரான் உச்சத் தலைவர் காமேனி: இறுதி ஊர்வலத்தின் முக்கிய தருணங்களின் தொகுப்பு!

பிப்ரவரி 28, 2026...ஈரான் உச்சத் தலைவரான அயோதுல்லா அலி காமேனியின் மூச்சை நிறுத்தியது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குண்டுகள். கிட்டத்தட்ட 34 ஆண்டுகளாக, ஈரானுக்கு, ஷியா பிரிவு முஸ்லீம்களுக்கு தலைமை பொறுப... மேலும் பார்க்க

'எம்எல்ஏ-க்களை வாங்குவதில் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து..!'- முதல்வரைச் சாடும் உதயநிதி

‘கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும், ‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் கர்நாடக நீர் பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் ... மேலும் பார்க்க