மணவாளக்குறிச்சி மணல் ஆலையை மூட பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்
திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஆந்திராவிலிருந்து வந்த 2,500 டன் ரேஷன் அரிசி
ஆந்திர மாநிலத்திலிருந்து திண்டுக்கல் மாவட்ட ரேஷன் கடைகளில் விநியோகிப்பதற்காக 2,500 டன் அரிசி சனிக்கிழமை ரயில் மூலம் வந்தடைந்தது.
பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டிய ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்டவை ஆந்திரம், கா்நாடகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்படுகின்றன. இதன்படி, ஆந்திராவின் கரீம் நகரிலிருந்து திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு 2,500 டன் அரிசி ரயில் மூலம் சனிக்கிழமை வந்தடைந்தது. இந்த அரிசி மூட்டைகள் அனைத்தும் திண்டுக்கல்-பழனி சாலையிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிட்டங்கிக்கு லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன. இங்கிருந்து ஒதுக்கீட்டின்படி ரேஷன் கடைகளுக்கு அவை அனுப்பி வைக்கப்படுகின்றன.