செய்திகள் :

திண்டுக்கல்: `வைகை ஆற்றில் விடப்படும் ஆடைகள், கழிவுகள்; தோல் நோய்கள் ஏற்படும் அபாயம்' -மக்கள் அச்சம்

post image

திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி வழியாக செல்லும் வைகை ஆற்றின் கரையோரத்தில் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

தமிழ்நாட்டில் இராமேஸ்வரத்திற்கு அடுத்தப்படியாக, இந்த கோவிலில் திதி கொடுப்பது போன்ற காரியங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன.

ஆஞ்சநேயர் கோவில்
ஆஞ்சநேயர் கோவில்

புனித தளமாக விளங்கும் இந்த கோவிலின் அருகில் இருக்கும் வைகை ஆற்றில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திதி கொடுப்பதோடு, குளித்த பின் அவர்களின் உடைகளை ஆற்றிலேயே விடுவது வழக்கம். இதனால் ஆற்றின் கரையோரத்தில் பெருமளவில் ஆடைகள் சேர்ந்து அசுத்தமாக காட்சியளிக்கிறது.

அதுமட்டுமல்லாமல், கோவிலைச் சுற்றி உள்ள உணவகங்களில் இருந்து வரும் கழிவுகள், நெகிழிக் குப்பைகள் அனைத்தையும் ஆற்றிலேயே கொட்டி விடுகின்றனர். இதனால் அங்கு குளிக்கும் பக்தர்களுக்கு தோல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

சுகாதாரமான இந்த தண்ணீரே திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கும் விவசாயத்திற்கும் பயன்படுகிறது.

இதனால் இதை குடிநீராக பயன்படுத்தும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், ஆற்றில் கழிவுகளை கலக்கக் கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வைகை ஆறு
வைகை ஆறு

இதன் தொடர்பாக நிலக்கோட்டை வட்டாட்சியரிடம் விளக்கம் கேட்டோம். “இன்னும் ஒரு வாரத்தில் ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் குப்பைகளையும் துணிகளையும் அகற்றிவிட்டு, உணவகங்களில் இருந்து கொட்டப்படும் கழிவு பொருள்கள் இனிமேல் ஆற்றில் கொட்டப்படாதபடி நடவடிக்கை எடுப்போம்” என அவர் உறுதி அளித்துள்ளார்.

ஒரத்தநாடு: டிட்வா புயல் எதிரொலி; கடும் குளிர் காற்றைத் தாங்க முடியாமல் 50 ஆடுகள் பலி?

ஒரத்தநாடு அருகே உள்ள கக்கரைக்கோட்டை கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் யேசு. இவர் பின்னையூரில் உள்ள ஒரு தோப்பில் சுமார் 300 ஆடுகள், 25 மாடுகளுடன் கிடை அமைத்திருந்தார். தினமும் வயல்களில் மேய்ச்சலுக்கு அழைத... மேலும் பார்க்க

Cyclone Ditwah: இலங்கையில் 153 பேர் மரணம்; சென்னைக்கு எச்சரிக்கை; டிட்வா புயலின் அடுத்த நகர்வு என்ன?

இலங்கையில் டிட்வா புயல் தாக்கத்தால் வானிலை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது. கன மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு, சூறைக் காற்று போன்றவற்றால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. Cyclone Ditwah: உயிரிழ... மேலும் பார்க்க

'டிட்வா' புயல் : புதுச்சேரியில் சீற்றத்துடன் காணப்படும் கடல்!

சீற்றத்துடன் காணப்படும் கடல்சீற்றத்துடன் காணப்படும் கடல்சீற்றத்துடன் காணப்படும் கடல்சீற்றத்துடன் காணப்படும் கடல்சீற்றத்துடன் காணப்படும் கடல்சீற்றத்துடன் காணப்படும் கடல்சீற்றத்துடன் காணப்படும் கடல்சீற்... மேலும் பார்க்க

டித்வா புயல்: பாம்பன் பாலத்தில் ரயில்கள் செல்ல தடை; ராமேஸ்வரத்தில் பலத்த காற்றுடன் தொடர் மழை

இலங்கை அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக உருவெடுத்துள்ளது. ‘டித்வா’ என அழைக்கப்படும் இந்த புயல், இலங்கையின் வட பகுதியில் இருந்து வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. மணிக்கு 10 கி.மீ. வ... மேலும் பார்க்க

நெல்லை, தூத்துக்குடியில் தொடரும் கனமழை; தாமிரபரணியில் வெள்ளம்; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தென்குமரிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதன் காரணம... மேலும் பார்க்க

திண்டுக்கல்: ``கழிவுநீர் கலப்பதால் பச்சை நிறத்துக்கு மாறிய நீர்'' - தவிக்கும் மக்கள்; காரணம் என்ன?

திண்டுக்கல், சீலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எஸ். பெருமாள்கோவில்பட்டி மற்றும் ஏ. ஓடைப்பட்டியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள செல்லமந்தாடி பெரியகுளம் தண்ணீர் தா... மேலும் பார்க்க