செய்திகள் :

திமுக : `செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஏன் ஸ்பெஷல் ஆஃபர்?' - கொதிப்பில் சீனியர்கள்!

post image

சட்டமன்றத் தேர்தல் தோல்வியிலிருந்து மீண்டுவரும் நோக்கில் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். பல்வேறு கறார் முடிவுகளை எடுத்துவரும் கட்சித் தலைமை, `செந்தில் பாலாஜி'க்கு மட்டும் சில ஆஃபர்களை கொடுத்திருப்பதால் கொதிப்படைந்திருக்கிறார்கள் சீனியர்கள் பலர்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

அமைப்புரீதியாக மிகப்பெரிய மாற்றங்களுக்குத் தயாராகிறது தி.மு.க. கட்சியை 110 மாவட்டங்களாகப் பிரித்ததோடு, நிர்வாகப் பதவிகளுக்கு வயது உச்ச வரம்பையும் விதித்திருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். உட்கட்சித் தேர்தல் மூலமாக நிர்வாகிகளைத் தேர்வுசெய்யவும் முடிவெடுத்திருக்கிறார்.

'மறுசீரமைப்பு எங்களுக்கு சாதகமாக இல்லை' என ஒருசில சீனியர்கள் முகம்சுழிக்க 'கட்சிக்காக நீங்க இத ஏத்துக்கணும்' என கறார் காட்டியிருக்கிறார். அதுவே செந்தில் பாலாஜியிடம் மட்டும் தி.மு.க தலைமை நெகிழ்வுத் தன்மையுடன் நடந்துகொள்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்த சிலர்.

நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர்கள், "கரூர் மாவட்டச் செயலாளராக இருக்கும் செந்தில் பாலாஜி, தற்போது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றிருக்கிறார். கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளை அவர் நிர்வகித்துவந்த நிலையில் தற்போது மறுசீரமைப்புக்கு பிறகு கரூர் மேற்கு, கரூர் கிழக்கு என இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

செந்தில் பாலாஜி, ஸ்டாலின்

கரூரை சேர்ந்த செந்தில் பாலாஜி கோவையில் எம்.எல்.ஏ ஆகியிருப்பதால் மறுசீரமைப்புக்கு பின் அவர் எந்த மாவட்டத்தில் மா.செ-வாக தேர்வு செய்யப்படுவார் என்ற குழப்பம் நீடித்தது. இந்நிலையில், 'உங்களுக்கு கரூர் வேண்டும் என்றால் கரூரை எடுத்துக் கொள்ளுங்கள், கோவை வேண்டும் என்றால் அதனை தேர்வு செய்யுங்கள்' என ஆப்ஷன் கொடுத்திருக்கிறது தலைமை.

ஒருவருக்கு எந்த ஊரில் வாக்கு செலுத்தும் உரிமை இருக்கிறதோ அந்த பகுதியில்தான் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படும். ஆனால், செந்தில் பாலாஜிக்கு மட்டும் விரும்பிய மாவட்டத்தை தேர்வு செய்ய ஆஃபர் கொடுத்திருக்கிறார்கள்" என்றனர்.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி தரப்பில் இது குறித்து விசாரித்த போது, "கோவை மாவட்டத்தில் தி.மு.க வீக்காக இருப்பதால் அங்கே கட்சியை வளர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் தலைமை கோவைக்கு சென்றலும் சரிதான் எனச் சொல்கிறது. அதேநேரம், கரூர் இடைத்தேர்தல் வரயிருப்பதால் கரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பை செந்தில் பாலாஜி ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிலவுகிறது. முடிவு செய்ய வேண்டியது அண்ணன் செந்தில் பாலாஜிதான்" என்றனர்.

`பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் புதிய சிப்காட் தொழில் பூங்கா' - தமிழக அரசு எடுத்த முடிவு!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த சென்னையின் 2-வது புதிய பசுமை விமான நிலையத் திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகளும் ஏகனாபுரம் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர... மேலும் பார்க்க

``இன்றுமுதல் 4 நாள்களுக்கு வங்கிகள் இயங்காது" - ஐக்கிய வங்கிகள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு!

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து, நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று... மேலும் பார்க்க

தமிழகம் பின்னோக்கிச் சென்றுவிடக் கூடாது... கவனத்தில்கொள்வாரா முதல்வர்?

வேகமாக வளரும் மாநிலம் என பெயரெடுத்த தமிழ்நாடு 2024-25-ல் 15.98% ஜி.எஸ்.டி.பி (Gross State Domestic Product) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த வளர்ச்சி அதே வேகத்தில் அரசின் கஜானாவிலும் பிரதிப... மேலும் பார்க்க

மதுராந்தகம் இடைத்தேர்தல்: 'வெளியூர் வேட்பாளர்களைக் களமிறக்கிய கழகங்கள்...' - பின்னணி என்ன?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த வேகத்தில், வேட்பாளர்களையும் அறிவித்திருக்கின்றன த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க. மதுராந்தகம் தொகுதிக்கு மூன்று த... மேலும் பார்க்க

நாதக: 'இடைத்தேர்தலில் கண்டிப்பா போட்டியிடணுமா?' - தயக்கத்தில் தம்பிகள்.. சீமான் முடிவென்ன?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் 'நாம் கண்டிப்பாக போட்டியிட வேண்டுமா..' என்ற கேள்விகள் நா.த.க சீனியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நிர்வாகிகளின் விருப்பத்துக்கு மாறாக 'கண்டிப்பாக போட்டியிட வேண்டும்... மேலும் பார்க்க

`பட்டினப்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம்' - வெளியானது அரசாணை!

தமிழகத்தின் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் அறிவித்திருந்தார். ரூ.1,200 கோடி ம... மேலும் பார்க்க