செய்திகள் :

திருச்சி: கிரெடிட் கார்டு புதுப்பிப்பதாகக் கூறி ரூ. 1 லட்சம் மோசடி; மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலை

post image

திருச்சி, கிராப்பட்டி, பாரதி நகர் கிரீன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (வயது: 31). இவர், ஒரு தனியார் வங்கியின் கிரெடிட் கார்டை வைத்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி மர்ம நபர் ஒருவர் இவரைத் தொடர்பு கொண்டு, 'வங்கி அதிகாரி பேசுகிறேன். உங்களுடைய கிரெடிட் கார்டைப் புதுப்பிக்க இருக்கிறோம்' எனக் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, அந்த மர்ம நபர் அனுப்பிய ஆப்பை ஓப்பன் செய்து அதில் கிரெடிட் கார்டு விவரங்களை அப்துல் ரஹீம் அளித்தார். பின்னர், சில நிமிடங்கள் கழித்து அவருடைய வங்கிக் கணக்கை சோதனை செய்தபோது, அதில் அவர் வைத்திருந்த ரூ. 1,02,000 பணத்தை அந்த மர்ம ஆசாமி ஆன்லைன் மூலமாகத் திருடியது தெரிய வந்தது.

trichy

இதனால், அதிர்ச்சியடைந்த அப்துல் ரஹீம் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து இது பற்றி மாநகர சைபர் கிரைம் போலிஸில் புகார் செய்தார். அதன் பெயரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் மூலம் கிரெடிட் கார்டைப் புதுப்பித்து தருவதாக மர்ம நபர் சொன்ன பொய்யை நம்பி இளைஞர் ஒருவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்க... மேலும் பார்க்க

ஈரோடு: 3.50 ஏக்கர் நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம்; சப்-ரிஜிஸ்டர், பத்திர எழுத்தர் கைது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராயர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சப்-ரிஜிஸ்டர் சங்கரை அணுகியுள்ளார். 3.50 ஏக்கர்... மேலும் பார்க்க

சென்னை: 'ஆபாச செய்கை, போட்டோ மார்பிங்' - GST பெண் ஆபீஸருக்கு செக்ஸ் டார்ச்சர்; சக அதிகாரி கைது

சென்னை முகப்பேரில் ஜி.எஸ்.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் என்பவரும் அத... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் கொலை: 'கந்துவட்டி பிரச்னை; விநாயகர் சிலை' - சென்னை துணை நடிகர் கொலையின் பின்னணி என்ன?

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராணி. இவரின் மகன் பிரதீப்ராஜ் (34). இவர் துணை நடிகராகவும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் சில தினங்... மேலும் பார்க்க

சென்னை: பள்ளி மாணவிக்கு `ஐ லவ் யூ' சொன்ன ஆசிரியர் - போக்சோவில் கைதான பின்னணி!

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில், 11-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி, இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வந்தார். அவரின் இன்ஸ்டாவுக்கு தொடர்ந்து காதல் மெசேஜ்கள் வந்து கொண்ட... மேலும் பார்க்க