செய்திகள் :

'திருச்சி கிழக்கில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்!' - தீர்மானம் நிறைவேற்றிய திருச்சி திமுக

post image

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து, புதிதாக த.வெ.க ஆட்சியமைத்துள்ளது. அந்த கட்சியைச் சேர்ந்த ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில், தி.மு.க தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியை தழுவியது, தி.மு.க-வினரை அதிர வைத்தது.

இந்நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டிய மு.க.ஸ்டாலின், கட்சி அமைப்பில் மாற்றத்தை கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட ஜோசப் விஜய் இரு தொகுதிகளிலும் வெற்றிபெற்றதை தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்தார். இதனால், அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

dmk meeting

இந்நிலையில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாகப் போட்டியிட வேண்டும் எனத் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக அதிரடித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழுவின் அவசரக் கூட்டத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அடிமட்டத் தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவோடு இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருச்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம், சென்னை அறிவாலயத்திற்கு முறைப்படி அனுப்பி வைக்கப்படவுள்ளது. கட்சியின் பொதுக்குழு மற்றும் உயர்நிலை செயல்திட்டக் குழுவின் ஆலோசனைகளுக்குப் பிறகே, இந்தத் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்த இறுதி முடிவை மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று சொல்கிறார்கள்.

திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.!

புதுக்கோட்டை : 'இந்த டாஸ்மாக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி.!' - மக்கள் நிம்மதிப் பெருமூச்சு!

தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே உள்ள மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. இதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், மி... மேலும் பார்க்க

அதிமுக: `எப்போதும் போல `நான் மட்டுமே எல்லாம்' என்று.!' - எடப்பாடிக்கு எஸ்.பி.வேலுமணி பதில்

தேர்தலுக்குப் பிறகு அதிமுக எடப்பாடி அணி - சி.வி.சண்முகம் அணி என இரண்டு குழுவாகப் பிரிந்திருக்கும் நிலையில், இருதரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டிவருகின்றனர்.இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்ற... மேலும் பார்க்க

பெட்ரோல் விலை உயர்வு: ``தன் இயலாமைக்கு மக்களைப் பலியாக்குகிறது ஒன்றிய அரசு" - சு.வெங்கடேசன் கண்டனம்!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நேரடித் தாக்கமாக, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இன்ற... மேலும் பார்க்க

`மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்' - விஜய்க்கு விசிக எம்.பி கோரிக்கை!

எடப்பாடி தலைமையில் ஒரு அணி, சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி தலைமையிலான ஒரு அணி என அதிமுக மீண்டும் பிளவுபட்டு இருக்கிறது. இதில் சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி தலைமையில் உள்ள 25 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வா... மேலும் பார்க்க

தவெக: ``திமுக தோல்விக்கு காரணம் இருவர் மட்டுமே! அதிமுகவின் பதவி வெறி.!" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்திருக்கும் தவெக முதல் சட்டமன்றக் கூட்டத்தை நம்பிக்கை வாக்கெடுப்புக்காக நடத்தியிருக்கிறது. இந்த நிலையில், தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி... மேலும் பார்க்க

தம்பிக்கு 'செக்', அண்ணனுக்கு 'லக்' - ஜெயலலிதா கட்டம் கட்டியவரை அழைத்து வந்த எடப்பாடி! - அதகள அதிமுக!

த.வெ.க-வுக்கு வலிய முட்டுக் கொடுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்!தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்றதையடுத்து, அதன் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற... மேலும் பார்க்க