செய்திகள் :

'திருச்சி கிழக்கில் விஜய்யின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்' - தி.மு.க வேட்பாளர் வழக்கு

post image

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க கட்சி ஆட்சியமைத்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவர் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இந்நிலையில், திருச்சி கிழக்கில் எம்.எல்.ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில், அவரை எதிர்த்து நின்று தோல்வியை தழுவிய தி.மு.க வேட்பாளர் இனிகோ இருதயராஜ், விஜய்க்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.

iniko iruthayaraj

அந்த வழக்கில், ``தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும். 18 வயதுக்கு குறைவான குழந்தைகளை வைத்து விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். வருமான வரி வழக்கு நிலுவையில் உள்ளதை வேட்ப மனுவில் மறைத்து வருமான வரி பாக்கி இல்லை என கூறியுள்ளார். சமூக வலைதளம் மூலம் பிரசாரத்திற்கு எவ்வளவு செலவு செய்தார் என்ற விவரங்களை இதுவரை விஜய் தெரிவிக்கவில்லை.

கட்சி அடையாளங்களை அணிந்து சென்று முழங்காலிட்டு தேவாலயத்தில் பிரசாரம் செய்தார். இப்படி, பல்வேறு விதிமீறல்களை செய்து வெற்றி பெற்றுள்ளதால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும். தேர்தல் வழக்கு முடியும் வரை திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக்கூடாது" என்று வழக்கு தொடுத்துள்ளார்.

கூட்டத்தில் 9-ல் 6 எம்.பி-க்கள் ஆப்சென்ட்: மம்தா கட்சி பாணியில் பிளவைச் சந்திக்கிறதா உத்தவ் சிவசேனா?

மகாராஷ்டிராவில் சிவசேனா ஏற்கெனவே 2022ம் ஆண்டு ஒரு பிளவைச் சந்தித்த நிலையில், மீண்டும் தற்போது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிளவைச் சந்தித்துள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் 9 மக்களவை ... மேலும் பார்க்க

அடுத்தகட்ட நடவடிக்கை... நகரும் சி.வி.சண்முகம்? சமாதான முயற்சியில் அதிமுக மூத்த நிர்வாகிகள்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாக, மயிலம் தொகுதி எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் மு... மேலும் பார்க்க

`இந்தியா - இலங்கை மீனவர் பிரச்னையை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும்!' - இலங்கை எம்.பி வலியுறுத்தல்

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், கண்டி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "​தமிழ்நாட்டில் புதிய வித்தியாசமான அணி... மேலும் பார்க்க

'ஆப்கானில் பெண்ணாகப் பிறப்பதைவிட.!' - தாலிபன் தேசத்தில் 13 நாள்கள்; இந்திய பெண்ணின் சோலோ பயண அனுபவம்

"அம்மா, அப்பா, நான் நலமாக இருக்கிறேன்." - ஆப்கானிஸ்தானின் கரடுமுரடான நிலப்பரப்பில் பயணம் மேற்கொண்ட ஒரு இந்திய `சோலோ பெண் இன்ஃபுளூயன்ஸர்', தனது பெற்றோருக்கு நூறு முறைக்கும் மேல் சொன்ன வாக்கியம் இது. ஒவ... மேலும் பார்க்க

`பி.எம்.ஸ்ரீ திட்டத்தை நிபந்தனைகளுடன் செயல்படுத்த கேரளம் முடிவு' - சிபிஎம்-ஐ விமர்சித்த வி.டி.சதீசன்

கேரளாவில் கடந்த முறை ஆட்சி செய்த எல்.டி.எஃப் அரசு ஏற்கெனவே மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பி.எம்-ஸ்ரீ கல்வித் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவது என்று கேரள காங்கிரஸ் முதலமைச்சர் வி.டி.சதீசன் ... மேலும் பார்க்க

'இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவிற்கு' ரஷ்ய எண்ணெய் நிலையங்கள் மீது உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்

நேற்று தான் ஈரான், அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதற்குள் இன்று உக்ரைன் ரஷ்யா மீது இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்யாவின் செய்த... மேலும் பார்க்க