செய்திகள் :

திருச்சி: சிறுமியைக் காதலித்து திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை; 22 வயது இளைஞர் கைது

post image

திருச்சி, உறையூர், பாண்டமங்கலம், காவல்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதீன் (வயது: 22). இவர், உறையூர் பகுதியைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுமியைக் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்தார்.

பின்னர், அந்தச் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி வேளாங்கண்ணிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். பின்னர், ஊருக்குத் தெரியாமல் மைதீனும், அந்தச் சிறுமியும் அவரவர் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இதற்கிடையே, மைதீன் அந்தச் சிறுமியைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றும் வேறு பகுதியில் வைத்தும் அந்தச் சிறுமியுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில், அந்தச் சிறுமி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

திருச்சி
திருச்சி

இந்நிலையில், சிறுமியின் உடலில் மாற்றங்கள் தென்படுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இது பற்றி குழந்தைகள் நலக்குழுவில் புகார் அளித்தனர். பின்னர், அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருவரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் மைதீன் மீது போக்சோ உள்ளிட்ட பதிவுகளை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வைத்து கொன்ற மருமகள்!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் வினீத் மினோச்சா (63). தொழிலதிபரான இவரின் மருமகள் பெயர், ஷாலு. சம்பவத்தன்று வினீத் அவரது வீட்டில் 26 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பா... மேலும் பார்க்க

நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!

நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.வீட்டுக்குள... மேலும் பார்க்க

`Will Kill Sugar Daddy Soon' - மனைவியைக் கொன்று தலையை ஃபிரிட்ஜில் வைத்த இளைஞர் `பகீர்' தகவல்!

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வி... மேலும் பார்க்க

குழந்தை திருமணங்களால் மூன்று சிறுமிகள் கர்ப்பம்! – போக்சோ வழக்கில் இளைஞர்களை தேடும் கடலூர் போலீஸ்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் பேக்கில் தொடரும் பணம், நகை திருட்டு! குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து அடிக்கடி திருட்டு நடக்கிறது. சமீபத்தில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற மாணவர் ஒருவரின் பேக்கில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர் திருட்டு போனது.... மேலும் பார்க்க

வீட்டிக்கு வெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகர் - அடித்து கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்

மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் வீட்டிற்... மேலும் பார்க்க