செய்திகள் :

திருப்பரங்குன்றம் : "திமுக அமைச்சர் சொன்ன பொய்கள்.!" - அண்ணாமலை காட்டம்

post image

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வழக்கம்போல உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்த வழக்கில் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கினார்.

இந்த தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த அவர் உத்தரவிட்டும், மாநில அரசு செயல்படுத்தவில்லை. தீர்ப்பை மேல்முறையீடு செய்வதாக தெரிவித்துள்ள அரசு, அதனை நிறைவேற்றாததற்கான காரணங்களை தெரிவித்தது.

நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, ``இதுதொடர்பாக 2014ம் ஆண்டு இரு நீதிபதிகளின் டிவிஷன் அமர்வு அளித்த தீர்ப்பை அரசு பின்பற்றுவதாக” கூறினார். மேலும் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகள் திருப்பரங்குன்றம் பிரச்னையை வைத்து மத மோதலை உருவாக்க முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார்.

திருப்பரங்குன்றம்: "நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்?"
திருப்பரங்குன்றம்: "நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்?"

இந்த நிலையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசே மத மோதலை உருவாக்க முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டியதுடன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பில் தவறு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"ரகுபதி சொன்ன பொய்கள்" -

1862 முதல் இருக்கும் பிரச்னை

அண்ணாமலை, "நீதி அரசர் அவர்களுடைய தீர்ப்புக்குப் பிறகு அதை மதிக்காமல், ஒரு மத மோதலை உருவாக்குவதற்கான எல்லா முயற்சிகளிலும் திராவிட முன்னேற்றக் கழக அரசு இறங்கி இருக்கிறது. மதுரை உயர் நீதிமன்றம் கொடுத்திருக்கக்கூடிய தீர்ப்பு, அதன் பிறகான நீதிமன்ற அவமதிப்பு உங்களுக்கு தெரியும்.

நான் கொஞ்சம் பின்னாடி இருந்து ஆரம்பிக்கிறேன். 1862-லிருந்து இது ஒரு ஆவணப்படுத்தப்பட்ட பிரச்னையாக இருக்கிறது. 1862, 1912 ஆண்டுகளில் மலையின் உச்சியில் விளக்கு அமைக்க முயற்சி செய்தபோது ஆங்கிலேயே அரசு மதக் கலவரம் வரக் கூடும் எனக் கூறி மறுத்திருப்பது ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.

திருப்பரங்குன்ற கார்த்திகை தீபம் விவகாரம்
திருப்பரங்குன்றம்

1923-ம் ஆண்டு நெல்லித்தோப்பு இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் சமமான உரிமைகொண்ட பகுதியாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மேலும் மலை உச்சியில் இருக்கும் தர்கா மற்றும் வழியில் உள்ள படிகட்டுகள் மட்டும்தான் இஸ்லாமியர்கள் கையில் இருப்பது. மலை முழுவதும் இந்துக்களுக்கு சொந்தம் எனக் கூறப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அப்போதைய மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கின்றனர். நீதிமன்றம் இந்த தீர்ப்பை நிறுத்தி வைத்தது.

1930 காலகட்டத்தில் பிரிவி கவுன்சிலில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பிரிவி கவுன்சில் 1923 தீர்ப்பை உறுதி செய்தது. மலையில் குவாரி வந்தபோதும், மரம்வெட்ட வந்தபோதும் கோயில் நிர்வாகம் இடத்தை பாதுகாத்தது.

1990 காலகட்டத்தில் இந்து முன்னணி உச்சியில் உள்ள தூணியில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை போராட்டமாக நடத்தினர். அதன்பிறகு சமீபத்தில் ஒரு பக்தர் உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி கேட்கிறார். கோயிலின் EO அதனை மறுக்கிறார். அதன்பிறகு ராம ரவிக்குமார் என்ற பக்தர் மதுரை கிளையில் மனு கொடுக்கிறார், அதன்படி டிசம்பர் 1ல் ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒரு தீர்ப்பை வழங்குகிறார்.

திருப்பரங்குன்ற கார்த்திகை தீபம் விவகாரம்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

"நீதிபதியின் தீர்ப்பு சரியானது"

நெல்லித்தோப்பு, படிகட்டுகள் மற்றும் சிக்கந்தர் தர்கா இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என்பதில் நீதிபதி தலையிடவில்லை. தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வேண்டுமென்றே சில பொய்களை சொல்லியிருக்கிறார். 'இந்த பிரச்சினை 2014லேயே முடிந்துவிட்டது. அப்போதே டிவிஷன் பென்ச் உச்சி பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்ற தீர்ப்பளித்துவிட்டனர். நீதிபதி தவறான தீர்ப்பை வழங்கியிருகிறார்' என்றவிதத்தில் ரகுபதி பேசியிருந்தார்.

ஆனால் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த தீர்ப்பையும் குறிப்பிட்டே தீர்ப்பு வழங்கியிருந்தார். அந்த 2014 மனுவில் மனுதாரர் மலையின் உச்சியில் தீபம் ஏற்றக் கோரியிருந்தார். ஆனால் மலை உச்சி இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதனால் நீதிபதி 2017ம் ஆண்டு தீர்ப்பிலும் அந்த கோரிக்கையை நிராகரித்தார்.

ஆனால் இப்போது மனுதாரர் உச்சியில் உள்ள தீபத்தூணில் தான் தீபம் ஏற்ற அனுமதி கேட்கிறார். சிக்கந்தர் தர்கா்காவில் இருந்து சில 50 மீட்டர் தூரத்தில்தான் தீபத்தூண் உள்ளது. இதில் ஏற்றதான் நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதேப்போல 1996ம் ஆண்டு தீர்ப்பையும் திமுகவினர் சுட்டிக்காட்டுகின்றனர். அந்த தீர்ப்பு அந்த ஆண்டுக்காக வழங்கப்பட்டது.

1996, 2014, 2017 தீர்ப்புகள் வேறுவேறு கோரிக்கைகளுக்காக வழங்கப்பட்டது. ஆனால் ரகுபதி இவற்றை சேர்த்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தவறான தீர்ப்பை வழங்கியதுபோல சித்தரிக்கிறார்.

மலையின் உச்சியில் தர்கா் இருக்கிறது. தீபத்தூண் சிறிய உச்சியில் இருக்கிறது. இதில்தான் தீபம் ஏற்ற 1.12.2025ல் அனுமதி வழங்கப்பட்டது". என்கிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம்; நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அரசியல் தலைவர்கள்! | Album

ஆஷிஷ். சாஆஷிஷ். சாஆஷிஷ். சாஆஷிஷ். சாஆஷிஷ். சாஆஷிஷ். சாஆஷிஷ். சாஆஷிஷ். சாஆஷிஷ். சாராஜ்குமார். சராஜ்குமார். சராஜ்குமார். சராஜ்குமார். சராஜ்குமார். சராஜ்குமார். சராஜ்குமார். சராஜ்குமார். சராஜ்குமார். சரா... மேலும் பார்க்க

'அறிவாலய வசை, உடைந்து போன மனம்!' - தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்

மதிமுக, திமுக, அதிமுக என பல்வேறு கட்சிகளில் பேச்சாளராக முக்கியப் பொறுப்புகளில் இருந்த நாஞ்சில் சம்பத் இன்று விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்திருக்கிறார். போயஸ் கார்டனில் உள்ள ஆதவ்வின் அலுவலகத்தில் பத்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: `நீதித்துறை, இந்துத்துவா, திமுக - ஓரணியில் நின்று முறியடிப்போம்' - சீமான் அறிக்கை

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்காவும் இருக்கும் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார... மேலும் பார்க்க

Indigo: மன்னிப்பு கேட்ட இண்டிகோ ; `இன்றிரவு முதல் விமான சேவைகள் சரியாகும்!’ - DGCA தகவல்

இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமான ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 1,2... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "ஆடு, கோழி பலியிட அறநிலையத்துறை எதிர்ப்பு ஏன்?" - திமுகவை கேள்வி எழுப்பும் சீமான்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்காவும் இருக்கும் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: ``நான் ஒன்னே ஒன்னு கேட்கிறேன், பதில் சொல்லுங்கள்'' - எம்.பி கனிமொழி

திருப்பரங்குன்ற விவகாரம் தமிழகம் மட்டுமன்றி, நாடாளுமன்றம் வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்ற மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் ‘தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க மதவாத சக்திகள் ம... மேலும் பார்க்க