Indigo: மன்னிப்பு கேட்ட இண்டிகோ ; `இன்றிரவு முதல் விமான சேவைகள் சரியாகும்!’ - DG...
Indigo: விமான சேவை பாதிப்பால் அவதியுற்ற பயணிகள்; விதிமுறைகளைத் திரும்ப பெற்ற DGCA
இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமான ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.
நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 1,232 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
இதில் கடந்த 4–5 நாட்களாக தினமும் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் கொண்டு வந்த விதிகளுக்கு ஏற்ப, இண்டிகோ நிறுவனம் தனது நெட்வொர்க்கை மறுசீரமைக்கத் தடுமாறி வருவதால்தான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று கூறப்படுகிறது.
குறிப்பாக விமானிகளுக்கு கூடுதல் ஓய்வு நேரம், வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விதிகளால் இண்டிகோ விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
விமான சேவையின் பாதிப்பால் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகும் நிலையில், மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன.

இந்நிலையில் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் , " புதிய விதிமுறைகளால் பயணிகளுக்கு ஏற்பட்டிற்கும் தடைகளையும், விமான நிறுவனத்தின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு புதிய விதிமுறைகளில் வார விடுப்பு உள்ளிட்ட சில விதிகளை திரும்பப்பெறுகிறோம்" என்று குறிப்பிட்டிருக்கிறது.












