திருப்பரங்குன்றம் : `அயோத்தி, மணிப்பூர்... சங்பரிவாரின் வழக்கமான வழிமுறையே!’ - க...
BB Tamil 9: "இப்போ எனக்கு எல்லாம் புரியுது" - அரோராவின் காலில் விழுந்த கம்ருதீன்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை.
மேலும் ஹவுஸ்மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார்.
பல நாள்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் இரண்டாவது புரொமோவில், ஆதிரையால் கம்ருதீன், அரோரா இடையே சண்டை நடக்கிறது.
"எல்லா விஷயத்திலும் கருத்து சொல்லாதீங்க ஆதிரை" எனச் சொல்லிவிட்டு, அரோராவின் காலில் விழுகிறார் கம்ருதீன்.
"ஆதிரைதான் உனக்கு எல்லாமே. இப்போ எனக்கு எல்லாம் புரியுது. ஆதிரை யாரு? நீ அப்படிச் சொன்னது உண்மையா? இல்லையா?" கம்ருதீன் கோபப்பட்டு, அரோராவிடம் கத்துகிறார்.




















