செய்திகள் :

திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும்" - அண்ணாமலை

post image

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.

ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், ``திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்" என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதன்படி மலை உச்சியில் தீபம் ஏற்றப்படவில்லை.

இதனால், அப்பகுதியில் பா.ஜ.க, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவே நேற்றிரவு பதட்டம் ஏற்றப்பட்டது.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்

உடனடியாக மாவட்ட ஆட்சியர் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தார். அதோடு, நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

அதனை இன்று விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனே இவ்வழக்கை மீண்டும் விசாரிக்கத் தீர்ப்பளித்தது.

அதன்படி இன்று மாலை விசாரணையைத் தொடங்கிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் 144 தடை உத்தரவை ரத்து செய்து, ``இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு காவல்துறை ஆணையர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்" என்று உத்தரவிட்டார்.

இதனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றக்கோரி பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஹெச். ராஜா உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

இந்த நிலையில், போலீஸின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, நீதிமன்ற உத்தரவுகளை தி.மு.க அரசு செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அண்ணாமலை, ``இந்து விரோத திமுக அரசு, திருப்பரங்குன்றம் கோயில் மலையில் பக்தர்கள் புனித கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தடுத்து, நீதிமன்ற உத்தரவை மீண்டும் ஒருமுறை வேண்டுமென்றே மீறியிருக்கிறது.

அதே வேளையில், பா.ஜ.க மாநில நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச். ராஜா மற்றும் பிற நிர்வாகிகளை கைது செய்ததற்காக தமிழக காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இந்து விரோத தி.மு.க அரசு நீதிமன்றத்தின் உத்தரவுகளை மேலும் மீறாமல் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்று பதிவிட்டிருக்கிறார்.

திருப்பரங்குன்றம்: "நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்?" - அமைச்சர் ரகுபதி விளக்கம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென எழுந்த கோரிக்கையும் அதைத்தொடர்ந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு நீத... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க திமுக கபட நாடகம்" - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

'இவர்கள் சிக்கந்தர் தர்காவையே தரைமட்டமாக்கி விடுவார்கள்!' - கொதிக்கும் பெ.சண்முகம் | பேட்டி

திருப்பரங்குன்றத்தில் நேற்று பதட்டமான சூழல் நிலவிய நிலையில், மனுதாரர் கேட்ட இடத்திலேயே தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. பரபரப்பான இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிய... மேலும் பார்க்க

Madurai, Coimbatore Metro: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்!

சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ போக்குவரத்து வசதியை அமைக்க தமிழ்நாடு அரசு வகுத்த திட்டத்தை சமீபத்தில் திருப்பி அனுப்பியது மத்திய அரசு. Metro திட்டம் நிராகரிப்பு: மத்திய அரச... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `கோயில் தீபம் விவகாரம்'- ஒரே சமூகத்தினரிடையே பிரச்னை; 144 தடை உத்தரவு- என்ன நடந்தது?

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில் பட்டியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இந்து மக்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மண்டு கருப்பணசாமி கோயில... மேலும் பார்க்க