செய்திகள் :

திருமங்கலம்: உழைப்பாளர் தினத்தையொட்டி ரஜினி கோவிலில் 16 வகை அபிஷேகத்துடன் வழிபாடு செய்த ரசிகர்!

post image

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் என்பவர் ரஜினிகாந்திற்கு கோவில் கட்டியுள்ளார். இந்த கோவிலில் கருங்கற்களால் ஆன இரண்டு சிலைகளை பிரதிஷ்டை செய்து 'ரஜினி கோவில்' என பெயர் சூட்டி வழிபாடு நடத்தி வருகிறார். இங்கு தினந்தோறும் காலை, மாலை என இரு வேளைகளிலும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், மே தினத்தில் உழைப்பின் உன்னதத்தை போற்றும் வகையில் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' படத்தில் அவர் ஆட்டோ ஓட்டுநராக வரும் கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும் வகையில், ஆட்டோ அருகில் ரஜினி நிற்பது போன்ற கட்-அவுட் கோவிலில் வைக்கப்பட்டிருந்தது. அந்த கட்டவுட்டிற்கு ​,​பால், பன்னீர், தயிர், இளநீர்,​சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

அபிஷேகத்தை தொடர்ந்து, உழைப்பாளர்கள் அனைவரும் வாழ்வில் எல்லா வளமும் பெற வேண்டும் என வேண்டி தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

​தொடர்ந்து, ரஜினி சிலைக்கு முன்பாக அவரது 'கூலி' படத்தின் புகைப்படத்தோடு, தொழிலாளர்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய கட்டிங் பிளேடு, திருப்புலி, நட்டு, போல்டு உள்ளிட்ட கருவிகளைக் கொண்டு "உழைப்பாளர் தினம்" என்ற எழுத்து வடிவத்தில் அலங்கரிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

உழைப்பாளர் தினம்

இதனை தொடர்ந்து ரஜினி ரசிகரான கார்த்திக் பேசியபோது, நாங்கள் ஐந்தாவது ஆண்டாக மே தினத்தை ரஜினி கோயிலில் கொண்டாடுகிறோம். உழைப்பாளர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்பேனர், போல்ட் மற்றும் நட் போன்ற இரும்பு கருவிகளைக் கொண்டே 'உழைப்பாளர் தினம்' என்ற எழுத்து வடிவிலான அலங்காரத்தை இந்த ஆண்டு கோவிலில் அமைத்துள்ளோம்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் வாழ்வில் மேலோங்க வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை" என்றார்.

மாணவர்களை அலறவிடும் அணில்: பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் காயம்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள மோகன்லால் சுகாடியா பல்கலைக்கழகத்தில், ஒரு சிறிய அணிலின் விசித்திரமான நடத்தை ஒட்டுமொத்த வளாகத்தையே திகைக்க வைத்துள்ளது. பொதுவாக மனிதர்களைக் கண்டாலே மர உச்சிக்கு ஓடும் ... மேலும் பார்க்க

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மரணத்துக்கு `தர்பூசணி காரணம் அல்ல' - இறந்தவர்கள் உடலில் விஷம்?

மும்பையில் கடந்த வாரம் தர்பூசணி சாப்பிட்டதால் அப்துல்லா என்பவரும், அவரது மனைவி மற்றும் மகள்கள் என்ற நான்கு பேர் இறந்தனர். அப்துல்லா தனது உறவினர்கள் 5 பேரை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு பிரியாணி விருந... மேலும் பார்க்க

"கணவர் ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொடுத்துவிட்டுப் போய்விட்டார்" - குழந்தையுடன் ஆட்டோ ஓட்டும் மும்பைப் பெண்

மும்பை கல்யான் பகுதியைச் சேர்ந்த கோமல் கெய்க்வாட் என்ற 25 வயது பெண் தனது 3 வயது கைக்குழந்தையை கையில் வைத்துக்கொண்டு ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார். கோமல் கெய்க்வாடிற்கு 18 வயதில் திருமண... மேலும் பார்க்க

`உழைக்கும் வர்க்கமே... உலகம் உனதே!' - `May 1' தூய்மை காக்கும் தொழிலாளர்கள் | புகைப்படத் தொகுப்பு!

தூய்மை பணியாளர்களின் சேவையை பாரட்டுவோம்தூய்மை பணியாளர்களின் சேவைதூய்மை பணியாளர்களின் சேவைதூய்மை பணியாளர்களின் சேவைதூய்மை பணியாளர்களின் சேவைதூய்மை பணியாளர்களின் சேவைதூய்மை பணியாளர்களின் சேவைதூய்மை பணிய... மேலும் பார்க்க

`மராத்தி மொழி கட்டாயம் கத்துக்கணும்' - ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு கெடு நீட்டிப்பு!

மகாராஷ்டிராவில் மும்மை, புனே, நாசிக், நாக்பூர் போன்ற பகுதியில் ஆயிரக்கணக்கான ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இவர்கள் மராத்தி இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிப்... மேலும் பார்க்க

கொல்கத்தா: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திறக்க முயற்சி?திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம்!

கொல்கத்தாவில் பதிவான வாக்குகள் அங்குள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.அதில் நேதாஜி உள்விளை... மேலும் பார்க்க