'கும்பகோணம் கலைக் கண்காட்சி' - ஆசிரியர்களின் அசத்தலான படைப்புகளின் க்ளிக்ஸ்!
திருவள்ளூர்: கொடூரமாகத் தாக்கப்படும் வடமாநில இளைஞர்; சர்ச்சையைக் கிளப்பும் வீடியோ; வலுக்கும் கண்டனம்
திருவள்ளூர் மாவட்டத்தில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் நான்கு சிறுவர்களால் அரிவாள்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சிராஜ். இவர் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த சில சிறுவர்கள் சிராஜை கத்தி போன்ற ஆயுதங்களைக் காண்பித்து மிரட்டுகின்றனர். ஒருகட்டத்தில் ஆயுதம் மூலம் மிரட்டி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சிராஜை அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

அங்கு அவரைக் கொடூரமாகத் தாக்குகின்றனர். அதை செல்போனில் வீடியோவாகவும் எடுக்கின்றனர். அந்தக் கொடூரக் காட்சியில், சிராஜ் வலி தாங்காமல் கதறும் காட்சியும் இடம்பெற்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து, அவரை ஆள்நடமாட்டம் இல்லாத ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் அவரைக் கொடூரமாகத் தாக்கிவிட்டு, அங்கேயே சிராஜை விட்டுச் செல்கிறார்கள்.
அங்கிருந்து மீட்கப்பட்ட சிராஜ் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
வைரலான இந்த வீடியோவை காவல்துறை கவனத்தில் கொண்டு, சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் எனச் சமூக ஊடகங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
















