செய்திகள் :

திருவள்ளூர்: ஜாமீனில் வந்தவர் வெட்டிக் கொலை - பட்டப்பகலில் நடந்த கொடூரம்!

post image

திருவள்ளூர் அருகே சிட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி என்கிற ரூபன் (33). இவர், குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்குச் சென்றவர். தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார். அதனால் வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்திட பைக்கில் வெங்கல் காவல் நிலையத்துக்குச் சென்றார். பின்னர், அங்கு கையெழுத்திட்டு விட்டு தன்னுடைய நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் மாரி பைக்கில் தாமரைப்பாக்கம் கூட்டு ரோடு பகுதியில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது மாரியின் பைக் மீது அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இதில் மாரியும் அவரின் நண்பர் வெங்கடேசும் பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

கொலை செய்யப்பட்ட மாரியின் பைக்

இந்தச் சமயத்தில் காரிலிருந்து இறங்கிய ஒரு கும்பல், மாரியை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி சாய்த்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்த மாரி, துடி துடித்து உயிரிழந்தார். பின்னர் காரில் வந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றது. அப்போது ஒரு வீட்டின் சுவரில் கார் இடித்து மோதி நின்றது. அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காரிலிருந்தவர்களை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். இதில் இரண்டு பேர் தப்பி ஓட மூன்று பேர் பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டனர். பின்னர் அவர்களை வெங்கல் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

இதற்கிடையில் மாரி கொலை குறித்து தகவல் அறிந்த வெங்கல் போலீஸார், அவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், கொலை வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்தனர். மாரியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மூன்று பேரை பொதுமக்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததால் அவர்களிடம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் பழிக்குப்பழியாக கொலை நடந்தது தெரியவந்திருக்கிறது.

பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வைத்து கொன்ற மருமகள்!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் வினீத் மினோச்சா (63). தொழிலதிபரான இவரின் மருமகள் பெயர், ஷாலு. சம்பவத்தன்று வினீத் அவரது வீட்டில் 26 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பா... மேலும் பார்க்க

நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!

நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.வீட்டுக்குள... மேலும் பார்க்க

`Will Kill Sugar Daddy Soon' - மனைவியைக் கொன்று தலையை ஃபிரிட்ஜில் வைத்த இளைஞர் `பகீர்' தகவல்!

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வி... மேலும் பார்க்க

குழந்தை திருமணங்களால் மூன்று சிறுமிகள் கர்ப்பம்! – போக்சோ வழக்கில் இளைஞர்களை தேடும் கடலூர் போலீஸ்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் பேக்கில் தொடரும் பணம், நகை திருட்டு! குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து அடிக்கடி திருட்டு நடக்கிறது. சமீபத்தில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற மாணவர் ஒருவரின் பேக்கில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர் திருட்டு போனது.... மேலும் பார்க்க

வீட்டிக்கு வெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகர் - அடித்து கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்

மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் வீட்டிற்... மேலும் பார்க்க