செய்திகள் :

திருவாரூர்: சிதிலமடைந்த குடிநீர் தொட்டி, அங்கன்வாடி கட்டடம்; அலட்சிய அதிகாரிகள்.. அச்சத்தில் மக்கள்!

post image

திருவாரூர் மாவட்டம், கூடுர் ஊராட்சிக்கு உட்பட்ட முசக்குளம் கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக முறையான சாலை வசதி, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அங்கன்வாடி மையம் என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருக்கிறது. இது குறித்து முசக்குளம் கிராமத்தினர் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், முசக்குளம் கிராமத்திற்கு நேரில் சென்று  அப்பகுதி மக்களிடம் பேசினோம்.

முசக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சண்முக கார்த்தி நம்மிடம் பேசும்போது,

“இந்த ஊரின் சாலை, மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் அங்கன்வாடி மையம் கட்டடம் என்று கிராமத்திற்கு முதன்மையான அடிப்படை வசதிகளே மோசமான நிலையில் தான் இருக்கிறது. அதிலும் மழைக்காலங்களில் எங்கள் நிலைமை இன்னும் மோசம் என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளிக்கு சென்று வரும் குழந்தைகள் வீட்டிற்கு வந்து சேரும் வரை, ஒருவித பதற்றத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது.

எங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியும், மிகவும் மோசமான நிலையில்தான் இருக்கிறது. அதன் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தின் கட்டடமும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதில்தான், 15-க்கும் மேற்பட்ட சிறார்கள் தினமும் கல்வி பயின்று வருகின்றனர். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகே அங்கன்வாடி மையமும் செயல்படுவதால் எந்த நேரத்திலும் அசம்பாவிதம் நிகழலாம். பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தோம். அதிகாரிகள் அலட்சியமாக இருக்கிறார்கள். இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டங்களில்தான் ஈடுபடுவோம்” என்கிறார் விரக்தியாக.

இதையடுத்து, கூடுர் ஊராட்சியின் அவல நிலை குறி்த்து திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டதற்கு, "ஊராட்சி நிர்வாகம் சார்பாக மதிப்பீடு செய்து அனுப்பியுள்ளோம். நிதி ஒதுக்கீடு பெற்ற பிறகு பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

விரைந்து மாவட்ட நிர்வாகம் அடிப்படை வசதிகளை எற்படுத்தி தரவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

`அஜித் அரசியலுக்கு வந்தாலும் கூட்டம் வரும்' - சரத்குமார்

தூத்துக்குடியில் நடிகரும், பா.ஜ.க நிர்வாகியமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஊழலுக்கு எதிராக விஜய் எந்த கட்சியை சேர்க்கப் போகிறார்? ஊழலுக்கு எதிராகத்தான் போட்டியிடுகிறோம்... மேலும் பார்க்க

சௌந்தர்யா முதல் அஜித் பவார் வரை - ஹெலிகாப்டர், விமான விபத்தில் உயிரிழந்த முக்கிய பிரபலங்கள்

மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் இன்று (ஜன..28) காலை நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.மகாராஷ்டிராவில் வரும் 5ம் தேதி நடக்க இருக்கும் ஜில்லா பரிஷத் தேர்தலுக்குப் ... மேலும் பார்க்க

Ajith Pawar: `அஜித் பவார் மரணம்; உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை வேண்டும்' - மம்தா பானர்ஜி

மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் இன்று (புதன்கிழமை) காலை மும்பையிலிருந்து பாராமதிக்குச் சென்ற நிலையில், பாராமதி விமான நிலைய ஓடுதளம் ... மேலும் பார்க்க

4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: `திராவிட மாடல் = எல்லாருக்கும் எல்லாம்' - ஸ்டாலின் நெகிழ்ச்சி!

ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெறாத கோயில்களைக் கண்டறிந்து குடமுழுக்கு நடத்தும்பணியை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 400 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி ம... மேலும் பார்க்க

``என்னுடைய ரத்தம் விஜய்க்கும் பயம் கிடையாது; தடைகளை எதிர்கொள்வார்!” - எஸ்.ஏ.சந்திரசேகரன்

திருவாரூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பிரமுகர் செந்தில்பாண்டியன் இல்லத் திருமணத்தில் தவெக தலைவர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``60 ஆண்டுகள... மேலும் பார்க்க