செய்திகள் :

திருவாரூர்: தனியாக நின்ற பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் ஈவ் டீசிங்; தவெக நிர்வாகி கைது

post image

தவெக-வின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த் என்கிற ஆனந்தராஜ் (24). இவரும், இவரது நண்பர் அசோக் என்பவரும் நேற்று இரவு திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்துள்ளார். அங்கு 22 வயது இளம் பெண் ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி தன் அப்பாவுக்காகக் காத்திருந்துள்ளார்.

தவெக நிர்வாகி ஆனந்த்
தவெக நிர்வாகி ஆனந்த்

அப்போது, ஆனந்த் அந்தப் பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் கிண்டல் செய்து ஈவ் டீசிங் செய்ததாகச் சொல்லப்படுகிறது. அந்தச் சமயத்தில் இளம் பெண்ணின் அப்பா அங்கு வந்துவிட அவரிடம் இதைக் கூறியுள்ளார். தனியாக நிற்கும் பெண் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா எனக் கேட்டுள்ளார்.

இதையடுத்து டக்கென ஆனந்தின் டூவீலரில் இருந்த சாவியை எடுத்து கொண்டு தனது மகளை அழைத்துக் கொண்டு திருவாரூர் நகர காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் விசாரணை நடத்திய போலீஸ் ஆனந்த் அவரது நண்பர் அசோக் இருவர் மீதும் கிண்டல் செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி: மது அருந்த பணம் தராத மனைவி; குக்கர் மூடியால் அடித்துக் கொன்ற கணவன்!

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள அல்லூர் மேலபச்சேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது: 45). இவர், விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பெயர் சின்னம்மாள் (வயது:42) . இவர்களுக்... மேலும் பார்க்க

திருமணமான 48 நாளில் தற்கொலை: மனைவியை கண்காணிக்க வீடு முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்திய டாக்டர்

மும்பை அருகில் உள்ள அம்பர்நாத்தில் வசிக்கும் டாக்டர் நிதின் என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி தான் விஷாகா(26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில நாட்களில் நிலைமை மாறியது. திரு... மேலும் பார்க்க

அனுமதி இல்லாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சி; தட்டிக்கேட்ட உதவி ஆய்வாளரைத் தாக்கிய புதிய தமிழகம் நிர்வாகிகள்

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள காமராஜர் நகரில் உள்ள வலம்புரி செல்வ விநாயகர் மற்றும் நாகமாரியம்மன் கோயிலில்திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவின்போது காவல்துறை அனுமதி இல்லாமல் ஆடல் பாட... மேலும் பார்க்க

சூலூர் சிறுமி பாலியல் கொடுமை வழக்கு: 2வது குற்றவாளியிடம் திருமணம் மீறிய உறவிலிருந்த பெண்மீது புகார்!

தஞ்சாவூர் அருகே உள்ள மாரியம்மன் கோவில் கன்னித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு மனைவி தனலட்சுமி. பெருமாள் மனைவி கிருஷ்ணம்மாள். இவர்கள் இருவரும் தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி சுந்தரவதனத்திடம் இன்று புகார்... மேலும் பார்க்க

கோவை: கிணற்றில் வீசிய துர்நாற்றம்; சாக்குப்பையிலிருந்து மீட்கப்பட்ட இளம்பெண் உடல் - போலீஸ் விசாரணை!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் கோபி ராசிபுரம் பகுதியில் செயல்படாத தொழிற்சாலை ஒன்று உள்ளது. தற்போது அந்த தொழிற்சாலையை திருமண மண்டபமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்... மேலும் பார்க்க

கோவை: `மீண்டும் தேர்ச்சி பெற முடியுமா?’ - நீட் மறுதேர்வு பயம்; விபரீத முடிவெடுத்த மாணவி!

கோவைப்புதூர் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் பிரபு. கோவை மாவட்ட டாஸ்மாக் சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாவட்டச் செயலாளராக உள்ள இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் அனுகீர்த்தனா (19) எட்டிமடை பகுதியி... மேலும் பார்க்க