செய்திகள் :

துணைவேந்தர் நியமன வழக்கு; உயர் நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!

post image

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டத்தை நிறைவேற்றி இருந்தது.

இந்தச் சட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், இந்த தடையை நீக்கி தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தரை மாநில முதல்வரே நியமிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்த தமிழக அரசு, அதனை ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுப்பியிருந்தது.

மு. க ஸ்டாலின்
மு. க ஸ்டாலின்

இந்தச் சட்டத்திருத்தம் உட்பட பல்வேறு மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்தன. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, 10 மசோதாக்களுக்கு அனுமதி வழங்கியது. அந்த 10 மசோதாக்களில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை மாநில முதல்வரே நியமிக்கலாம் என்ற சட்டத்திருத்தமும் அடங்கும்.

இதனைத் தொடர்ந்து மாநில முதல்வரே துணைவேந்தர்களை நியமிப்பதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் இந்தச் சட்டத்திருத்தத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முழுமையாக விசாரிக்காமல் அவசரக்கோலத்தில் இடைக்கால தடை விதித்துள்ளதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று ( பிப்.4) தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்கி இருக்கிறது.

தடையை நீக்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர். ஆறு வாரங்களில் வழக்கை விசாரித்து முடிக்கவும், அதுவரை புதிய துணைவேந்தர்களை நியமிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

'96 க்குப் பின் ஒற்றை இலக்க வாக்கு வங்கி மட்டுமே!' - தமிழகத்தில் காங்கிரஸின் பலம்தான் என்ன?

திமுக காங்கிரஸ் இடையே மூன்று மாதங்களுக்கு முன்பாக புகைய தொடங்கிய நெருப்பு இன்னும் அணையவில்லை. 'அமைச்சரவையில் பங்கு கிடையாது' என முதல்வர் ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன பிறகும் காங்கிரஸார் விடுவதாக இல்லை... மேலும் பார்க்க

நாடாளுமன்றம்: `இடைநீக்கங்கள், பதில் இல்லா கேள்விகள்' - முடங்குகிறதா ஜனநாயகத்தின் இதயம்?

நாடாளுமன்றம்இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, உலகிலேயே மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. நமது ஜனநாயகத்தின் இதயமாகத் திகழும் நாடாளுமன்றம், மக்களவை மற்றும் ... மேலும் பார்க்க

"2 அரசுகளும் அலைக்கழித்தால் எங்கே போவது?" - நயினார் நாகேந்திரனிடம் குமுறிய அங்கன்வாடி ஊழியர்கள்

காலமுறை ஊதியம், பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே 10வது நாளாக தொடர் காத்திருப்பு... மேலும் பார்க்க

பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்!

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே கோவை வடக்கு தொகுதியில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. பாஜக-வின் சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன், அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிழலான சந்திர... மேலும் பார்க்க

"மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?"- மீண்டும் எதிர்வினை ஆற்றிய மாணிக்கம் தாகூர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக- காங்கிரஸ் இடையே தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.அதிக சீட்டுகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.இந்தச் ச... மேலும் பார்க்க

இந்தியா முழுவதும் விவசாய மற்றும் தொழிலாளர் சங்கம் போராடுவது ஏன்? 6 புள்ளிகள்|Quick Points

இன்று இந்தியா முழுவதும் தொழிலாளர் சங்கங்களும், விவசாய சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றன. இது நாடு முழுவதுமே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்திற்கான காரணத்தை 6 புள்ளிகளில் தெரிந்துகொ... மேலும் பார்க்க