செய்திகள் :

``துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில் குருகுல கல்வியைச் செயல்படுத்த முடியவில்லை" - ஆளுநர் அர்லேக்கர்

post image

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ் கல்லூரியின் (தன்னாட்சி) 59-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ்நாட்டின் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, இளங்கலை மற்றும் முதுகலை பயின்ற மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தார்.

விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிய ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ``கல்வி என்பது வெறும் கல்விச் சார்ந்த வெற்றியோடு மட்டும் நின்றுவிடக் கூடாது. அது சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள வகையில் பங்களிக்க வேண்டும்.

மாணவர்கள் தார்மீக விழுமியங்கள், நேர்மை மற்றும் பொறுப்புணர்வுடன் தேசக் கட்டமைப்பில் தீவிரமாகப் பங்கெடுக்க வேண்டும்.

ஆளுநர் அர்லேகர்
ஆளுநர் அர்லேகர்

மாணவர்களுக்கு ஒரு பரந்த பார்வையை வழங்கவும், சிறந்த பண்பு நலன்களை உருவாக்கவும், தேசக் கட்டமைப்பிற்கு வலுவான அடித்தளத்தை அமைக்கவும் தான் 'தேசிய கல்விக் கொள்கை' கொண்டு வரப்பட்டது.

ஆனால், இந்தக் கொள்கையின் நன்மைகளை முழுமையாக ஆராய்ந்து பார்க்காமல், தமிழ்நாட்டில் இதனை இதுவரை அமல்படுத்தாமல் இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

இந்தியாவின் பாரம்பர்ய குருகுல கல்வி முறை இன்றளவும் வெளிநாடுகளில் பெரும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் குருகுல கல்வி முறைதான் 'மதராஸா கல்வி முறை' என்ற பெயரில் இங்கிலாந்தில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில் குருகுல கல்வி முறையை இதுவரை முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை" என்று குறிப்பிட்டார்.

சரத்பவார் கட்சி எம்பி-க்கள் 6 பேர் பாஜக கூட்டணிக்குத் தாவ முயற்சி? காங். தலைவர் கருத்தால் சலசலப்பு

மகாராஷ்டிராவில் ஏற்கனவே சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உடைந்து இரு கட்சிகளாகச் செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த 6 எம்.பி.க்... மேலும் பார்க்க

‘கோவை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டோர் வாரிசுகளுக்கும் அரசு வேலை வழங்குக’ – வானதி சீனிவாசன் கோரிக்கை

பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி கரூரில் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தன... மேலும் பார்க்க

`துப்பாக்கிச்சூட்டில் பலியான குடும்பத்திற்கு அரசு பணி வழங்கியபோது தடுக்காதது ஏன்?' - செங்கோட்டையன்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கும் விதமாக கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்து ... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டில் ஒரு வாரம் கோழி இறைச்சி விற்பனை நிறுத்தம்?' - வணிகர்கள் கூட்டமைப்பின் தீர்மானம் என்ன?

தஞ்சையில் கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் ஒரு வார காலத்திற்கு கோழி இறைச்சி விற்பனையை முழுமையாக நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட கோழி வணிக... மேலும் பார்க்க

`3,084 ஏக்கர் கோயில் நிலமா? பாஜக-வின் அப்பட்டமான பொய்; இதுதான் நடந்தது..!'- எம்.பி ஜோதிமணி விளக்கம்

கோவை பீளமேடு பா.ஜ.க அலுவலகத்தில் மாநில பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``கரூரில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நான்கு கோயில்களின் ரூ. 25 ஆ... மேலும் பார்க்க

'ஸ்டார்ட்... கேமரா... ஆக்ஷன்' - முதல்வர் விஜய் பேச்சு குறித்து ஜெயக்குமார் விமர்சனம்

சட்டமன்ற தேர்தல் படுதோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்ட, அதைப் புறக்கணித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீண்ட இடைவெளிக்கு பின், சென்னையில... மேலும் பார்க்க