செய்திகள் :

தூத்துக்குடி: Reelsக்காக பைக் சாகசம்; முறித்துப்போன இளைஞரின் கை; வைரலான விழிப்புணர்வு வீடியோ

post image

தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்தவர் கமலேஷ். இவர், தனது பைக்கில் வேகமாக வந்து முன் சக்கரத்தைத் தூக்கியும், வேகமாகப் பின்னோக்கி திருப்பி பின் சக்கரத்தைத் தூக்கியும் பல்வேறு சாகசங்களைச் செய்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் ’ரீல்ஸ்’ வெளியிட்டுள்ளார். இது வைரலானது.

விழிப்புணர்வு வீடியோவில் பேசும் கமலேஷ்
விழிப்புணர்வு வீடியோவில் பேசும் கமலேஷ்

தகவலறிந்த தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீஸார் கமலேஷ் வெளியிட்ட வீடியோவில் பைக்கின் பதிவெண்ணை வைத்து அவரைக் கண்டறிந்து கைது செய்தனர். அப்போது அவரது கையில் கட்டு போட்டிருந்தார்.

ரீல்ஸ் எடுத்தபோது கீழே விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை வைத்தே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீஸார் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், “பைக் ஓட்டுறதுல எனக்கு ஆர்வம். நண்பர்கள் சொன்னாங்களேன்னு வீலீங் செய்ய ஆரம்பிச்சேன். அதை சோஷியல் மீடியக்கள்ல போட்டேன். இதே மாதிரி வீலிங் செய்யுற நிறைய வீடியோக்களையும் பார்த்தேன். அதே மாதிரி நானும் செஞ்சு பார்த்தேன். தூத்துகுடி – மதுரை நெடுஞ்சாலையில பைக்குல வீலிங் அடிச்சேன். வீலிங் அடிச்சப்போதான் ஸ்லிப் ஆகி கீழே விழுந்துட்டேன்.

பைக் வீலிங்

அதுல என்னோட இடது கையில மணிக்கட்டு பகுதியில சவ்வு விலகியதுடன் எலும்புமுறிவும் ஏற்பட்டுச்சு. இனிமேல் யாரும் பைக் வீலிங் செய்யாதீங்க” எனப் பேசியிருந்தார்.

இதுகுறித்துப் பேசிய போலீஸார், “ரீல்ஸ் மோகம் என்பது சமூக வலைத்தளங்களில் குறுகிய நேரக் காணொலிகளை  உருவாக்கவும் பார்க்கவும் ஏற்படும் அதிகப்படியான ஆர்வத்தையும் அடிமைத்தனத்தையும் குறிக்கிறது.

லைக்ஸ் மற்றும் பார்வைகளுக்காக எடுக்கப்படும் சில செயல்கள், பல இடங்களில் பாதுகாப்பு மற்றும் சமூகப் பிரச்னைகளை உருவாக்கி வருகின்றன. அதிலும் ஆபத்தை உணராமல், குடும்ப உறுப்பினர்கள், தனது எதிர்காலத்தைப் பற்றிக்கூட யோசிக்காமல் இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். நாளுக்கு நாள் இந்த ரீல்ஸ் மோகம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

பைக் வீலிங்

ரீல்ஸ் மோகத்தைக் குறைக்கவும், அதிலிருந்து விடுபடவும் புத்தகங்கள் படிப்பது, தியானம், நடைப்பயிற்சி, பாடல்களைக் கேட்டல், மரக்கன்றுகள் நடுதல், தோட்டங்களைப் பராமரித்தல் போன்ற பல பயனுள்ளவற்றை செய்யலாம்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ரீல்ஸ்கள் போலீஸாரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பல ஐ.டி.கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன” என்றனர்.   

Delimitation: 'தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிப்பது ஏன்?' - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

தொகுதி மறுவரையறையில் திமுகவின் ஆதரவு நிலைப்பாட்டை மாற்றக் கோரி இந்தியா கூட்டணித் தலைவர்கள், திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்திக்கச் சென்னை வந்துகொண்டிருக்கின்றனர்.இந்த நிலையில், திமுகவின் இந்த நிலைப்பாடு க... மேலும் பார்க்க

2027 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை கோரும் ராகுல் காந்தி; தென்னிந்தியாவுக்கு எதிரானதா?

நாளை (நவம்பர் 30) கூடும் நாடாளுமன்றச் சிறப்பு அமர்வில் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவர உள்ளது மத்திய பாஜக அரசு.இந்த மசோதாவிற்கு திமுக ஆதரவளித்துள்ளது.ராகுல் காந்தியின் 2027 பதிவுஇந்த நிலையில் நேற்... மேலும் பார்க்க

'காங். சந்திப்பை விரும்பாத ஸ்டாலின்; சோனியா மீது பாரத்தை போட்ட ராகுல்!' - பின்னணி என்ன?

பாஜக அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக அறிவித்திருந்தது. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்திக்க சோனியா, ராகுல் உட்பட காங்கிரஸின் முக்கிய தலைகள் அத்தனை... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: பாரம்பர்யபடி உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றலாம்; மக்களுக்கு அனுமதி

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையொட்டி நேற்று (நவம்பர் 28) திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல்தூணில் தீபம் ஏற்றப்பட்டது.இதன் பிறகு, இனி பாரம்பர்ய வழக்கப்படி உச்சிப் பிள்ளையார் கோயிலில்தான் தீபம் ஏற்றப்பட வேண்டு... மேலும் பார்க்க

"வரலாறு எங்களை எட்டப்பன்களாக அல்ல, கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும்" - ராகுலுக்கு ஸ்டாலின் பதில்

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக அளித்துள்ள ஆதரவைத் திரும்பப் பெறுமாறு பேச ஸ்டாலினைச் சந்தித்துப் பேச சென்னை வருகிறார்கள் இந்தியா கூட்டணித் தலைவர்கள்.இதில் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்... மேலும் பார்க்க

Delimitation: 'ராகுல், சோனியா முதல் மம்தா வரை' - ஸ்டாலினைச் சந்திக்க சென்னை வரும் தலைவர்கள் பட்டியல்

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக கொடுத்துள்ள ஆதரவைத் திரும்பப் பெறக் கோரிக்கை வைக்க சென்னை வருகிறார்கள் இந்தியா கூட்டணித் தலைவர்கள்.இரண்டு தனி விமானங்களில் வரும் தலைவர்கள் யார் யார் என்கிற பட்டியல் ... மேலும் பார்க்க