செய்திகள் :

Delimitation: 'தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிப்பது ஏன்?' - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

post image

தொகுதி மறுவரையறையில் திமுகவின் ஆதரவு நிலைப்பாட்டை மாற்றக் கோரி இந்தியா கூட்டணித் தலைவர்கள், திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்திக்கச் சென்னை வந்துகொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், திமுகவின் இந்த நிலைப்பாடு குறித்துச் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்துத் தெரிவித்துள்ளார்.

"தொகுதி மறுவரையறை குறித்து திமுக முன்வைத்த முக்கியக் கோரிக்கைகளில், 1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதும், அந்த நிலை 25 ஆண்டுகளுக்குத் தொடர வேண்டும் என்பதும் அடங்கும்.

தொகுதி மறுவரையறை | Delimitation
தொகுதி மறுவரையறை | Delimitation

இந்த இரண்டு கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கான தொகுதிகள் குறையாது என ஏற்கெனவே உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தி உறுதிமொழி அளித்துள்ளார்.

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் 59 ஆக உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அவ்வாறு 59 இடங்களாக உயரும்போது, தமிழகத்தின் பங்கு சதவிகிதம் 7.18%-லிருந்து 7.2% ஆக அதிகரிக்கும். திமுக வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதால்தான் அதற்கு ஆதரவு அளிக்கப்படுகிறது.

இன்னும் முடிவெடுக்காவிட்டால்...

1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த டிசம்பருக்குள் முடிவெடுக்கப்படாவிட்டால், புதிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக் கணக்கில் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

திமுக கூட்டம்
திமுக கூட்டம்

மேலும், 1971 கணக்கெடுப்பின் அடிப்படையிலான இந்த நடைமுறை 2051 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம் என்பதால் பல கட்சிகளின் ஆதரவும் தேவைப்படுகிறது.

ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி நிலைப்பாடுகள் இருந்தாலும், தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துவிடாமல் தடுக்கவும், ஒட்டுமொத்த மாநில நலனைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது."

2027 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை கோரும் ராகுல் காந்தி; தென்னிந்தியாவுக்கு எதிரானதா?

நாளை (நவம்பர் 30) கூடும் நாடாளுமன்றச் சிறப்பு அமர்வில் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவர உள்ளது மத்திய பாஜக அரசு.இந்த மசோதாவிற்கு திமுக ஆதரவளித்துள்ளது.ராகுல் காந்தியின் 2027 பதிவுஇந்த நிலையில் நேற்... மேலும் பார்க்க

'காங். சந்திப்பை விரும்பாத ஸ்டாலின்; சோனியா மீது பாரத்தை போட்ட ராகுல்!' - பின்னணி என்ன?

பாஜக அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக அறிவித்திருந்தது. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்திக்க சோனியா, ராகுல் உட்பட காங்கிரஸின் முக்கிய தலைகள் அத்தனை... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: பாரம்பர்யபடி உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றலாம்; மக்களுக்கு அனுமதி

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையொட்டி நேற்று (நவம்பர் 28) திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல்தூணில் தீபம் ஏற்றப்பட்டது.இதன் பிறகு, இனி பாரம்பர்ய வழக்கப்படி உச்சிப் பிள்ளையார் கோயிலில்தான் தீபம் ஏற்றப்பட வேண்டு... மேலும் பார்க்க

"வரலாறு எங்களை எட்டப்பன்களாக அல்ல, கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும்" - ராகுலுக்கு ஸ்டாலின் பதில்

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக அளித்துள்ள ஆதரவைத் திரும்பப் பெறுமாறு பேச ஸ்டாலினைச் சந்தித்துப் பேச சென்னை வருகிறார்கள் இந்தியா கூட்டணித் தலைவர்கள்.இதில் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்... மேலும் பார்க்க

Delimitation: 'ராகுல், சோனியா முதல் மம்தா வரை' - ஸ்டாலினைச் சந்திக்க சென்னை வரும் தலைவர்கள் பட்டியல்

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக கொடுத்துள்ள ஆதரவைத் திரும்பப் பெறக் கோரிக்கை வைக்க சென்னை வருகிறார்கள் இந்தியா கூட்டணித் தலைவர்கள்.இரண்டு தனி விமானங்களில் வரும் தலைவர்கள் யார் யார் என்கிற பட்டியல் ... மேலும் பார்க்க

செஞ்சி சிறுமி மாயம்: "கட்டி வைத்து அடித்தனர்" – சிபிசிஐடி போலீசார் மீது 3 இளைஞர்கள் புகார்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறுமி காணாமல் போன வழக்கு விசாரணை என்ற பெயரில் சிபிசிஐடி போலீசார் அழைத்து சென்று கை, கால்களை கட்டி வைத்து அடித்து சித்ரவதை செய்வதாக இளைஞர்கள் குற்றச்சாட்டு. விழுப்புர... மேலும் பார்க்க