செய்திகள் :

ஜார்க்கண்ட்: கோயிலுக்குச் சென்றபோது கார் விபத்து; 13 பேர் உயிரிழந்த சோகம்

post image

பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர் காரில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருக்கும் ராஜ்ரப்பா கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். அதிகாலை நேரத்தில் கார் ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் ராஞ்சி-பாட்னா நெடுஞ்சாலையில் சென்ற போது முன்னால் சென்ற பெரிய கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

கனரக வாகனம் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றுவிட்டது. கார் அதன் மீது மோதியதா அல்லது கனரக வாகனம் கார் மீது மோதியதா என்பது குறித்து தெளிவாகத் தெரிய வில்லை. விபத்து குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். உள்ளூர் மக்களும் விரைந்து வந்து விபத்தில் சிக்கி இருந்தவர்களை காரில் இருந்து வெளியில் எடுக்க உதவி செய்தனர்.

காரில் 14 பேர் பயணம் செய்தனர். காயம் அடைந்த அனைவரும் ராம்கர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை டாக்டர்கள் சோதித்தபோது 13 பேர் உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது.

ஒருவர் மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பி இருக்கிறார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்தவர்களில் 4 பேர் குழந்தைகள் ஆவர். காரில் பயணம் செய்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த விபத்து குறித்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் மாநில ஆளுநர் ஆகியோர் அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும் இச்சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்து இருப்பதோடு இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா ரூ.2 லட்சம் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

விழுப்புரம்: ஐயப்ப பக்தர்கள் வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து - பக்தர் உட்பட இருவர் உயிரிழந்த சோகம்

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தேனியில் இருந்து புறப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து இன்று காலை சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட... மேலும் பார்க்க

திருச்சி: காதணி விழாவிற்குச் சென்ற 8 பேர் பலி; ஆம்னி வேன் மரத்தில் மோதிய விபத்தில் பரிதாபம்

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த செங்கல் சூளையில் பணிபுரியும் கூலி தொழிலாளர்கள் மாணிக்கம், சங்கிலி, முருகன், ராஜேஷ், சக்திவேல், சுப்பிரமணியன், பாவாடை. இவர்கள் ஆம்னி வேனில் நாமக்கல் ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: டூவீலர் மீது லாரி மோதி விபத்து - தாய் இரண்டு மகன்கள் உட்பட மூன்று பேர் பலியான சோகம்!

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள கண்டியூர் பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் முகம்மது ஷாஜாலி. இவரது மனைவி பெனாசிர் பேகம் (26). இவர் தனது மகன்கள் முகமது ஜாவீத் (12), முகமது ஜாசித் (10) , முகமது... மேலும் பார்க்க

`என்னை விடுங்க. குழந்தைகளை மட்டும்..' - பாம்பு கடித்தும் கதறிய தாய்; இரு குழந்தைகள் உயிரிழந்த சோகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்திரன் - புஷ்பா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் தேவதர்ஷினி மற்றும் ஒன்றரை வயதில் தேவஜனனி என இரண்டு குழந்தைகள் இர... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் ஆசிட் டேங்கர் லாரி விபத்து; நச்சுப் புகையால் மக்கள் அவதி | Photo Album

ஆசிட் டேங்கர் லாரி விபத்து ஆசிட் டேங்கர் லாரி விபத்து ஆசிட் டேங்கர் லாரி விபத்து ஆசிட் டேங்கர் லாரி விபத்து ஆசிட் டேங்கர் லாரி விபத்து ஆசிட் டேங்கர் லாரி விபத்து ஆசிட் டேங்கர் லாரி விபத்து ஆசிட் டேங்க... மேலும் பார்க்க

ஈரோடு: கட்டுப்பாட்டை இழந்த கார்; 17 பேர் காயம் - சாலை ஓரத்தில் காத்திருந்தவர்களுக்கு நிகழ்ந்த சோகம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள பங்களாபுதூர் தனியார் கல்லூரி பிரிவு பேருந்து நிறுத்தத்தில், 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் 15 பெண் தொழிலாளர்கள் வழக்கம்போல் இன்று காலை... மேலும் பார்க்க